states

img

தேர்தல் நிதி திரட்டவே பொதுத்துறைகள் தனியார்மயம்!

ரூ.1 லட்சம் கோடிக்கான சொத்து வெறும் ரூ. 800 கோடிக்கு குத்தகை

ஒன்றிய அரசின் தனியார்மய மாக்கல் மூலம் தரமான, திறமை யான, செயல்பாடு கொண்ட சண்டி கரின் லாபம் தரும் நிறுவனம், கொல்கத்தாவில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு, ரூ.800 கோடிக்கு விற்கப்பட உள்ளது. அதுவும் 90 ஆண்டுகளுக்கு! குத்தகைக்குத்தான் தருகி றோம் என்று கூறினாலும், உண் மையில் இது விற்பனை செய்வ தற்கு சமமான ஒன்று. இந்த சொத் துக்களின் மதிப்பு குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் கோடி என்று நிபு ணர்கள் கூறுகின்றனர். அவ் வாறு இருக்கையில், இவ்வளவு பெரிய சொத்திற்கு, ரூ.800 கோடி கொடுப்பதில் அந்த தனியார் நிறு வனத்துக்கு என்ன சிரமம் இருக் கப் போகிறது? இந்த 800 கோடி ரூபாய் முதலீடு நான்கு ஆண்டு களில் அந்த புதிய தனியார் நிறு வனத்திற்கு கிடைத்துவிடும்.  இவ்வளவும் தெரிந்தும் எதற் காக பொதுத்துறை மின் நிறு வனங்களை விற்க வேண்டும்? ஒன்றிய அரசின் பட்ஜெட்டுக்கு நிதி திரட்டுவதற்காகவா? இல்லை. பட்ஜெட்டுக்கு பணம் திரட்டுவது மட்டுமின்றி பாஜக வுக்கு தேர்தல் நிதி திரட்டவும் சேர்த்துத்தான் இந்த பகல் கொள்ளை. தனியார்மயத்திற் கான கமிஷனை தேர்தல் பத்தி ரங்கள் மூலம் பாஜக பெற்றுக் கொள்ளும். மின்சார சட்டம் நிறை வேறவில்லை என்றாலும் தனி யார்மயம் தொடரவே செய்யும்.

திருவனந்தபுரம், ஜன.17- பாஜகவுக்கு தேர்தல் நிதி திரட் டவே லாபத்தில் இயங்கும் பொதுத் துறைகள் தனியார்மயம் ஆக் கப்படுவதாக பொருளாதார வல்லு நரும் கேரள முன்னாள் நிதியமைச்ச ருமான தாமஸ் ஐசக் தெரிவித்துள் ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: மூன்று யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங் களை தனியார் மயமாக்க ஒன்றிய அரசு டெண்டர் உறுதி செய்துள்ளது. இதற்கு ஒன்றிய அரசு வெளி யிட்டுள்ள காரணம் என்னவெனில், மின் விநியோகத் துறையில் போட்டி யை ஏற்படுத்துவதன் மூலம் பொதுத் துறை நிறுவனங்களின் திறனை அதி கரிக்கிறோம் என்பதாகும்.  மேலும், “இந்தியாவின் மின்சார விநியோகத் துறையில் விநியோகச் சங்கிலி மிகவும் பலவீனமாக உள் ளது. கட்டணங்களை முறையாகச் செலுத்தாதது, நிலுவைத் தொகை யை வசூலிக்காதது நீடிக்கிறது.

குறிப்பாக, மாநில அரசுகளின் பெரும் நிலுவைத் தொகை, அர சுக்குச் சொந்தமான டிஸ்காம்கள் அல்லது விநியோக நிறுவனங் களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற் படுத்தியுள்ளது. இது ஒட்டுமொத்த மின் துறையின் நம்பகத்தன்மைக் கும் சவாலாக உள்ளது” என ஒன்றிய அரசு கூறியுள்ளது. ஆனால், இப்போது விற்ப னைக்கு வந்துள்ள சண்டிகர் டிஸ்கா மின் உண்மை நிலையை ஆய்வு செய்தால், ஒன்றிய அரசு கூறுவது எவ்வளவு பொய்யானது என்பதை தெரிந்துகொள்ளலாம். முதலாவ தாக இந்த பொதுத்துறை நிறுவனம் நஷ்டத்தில் இல்லை. பெரும் லாபத் தில் உள்ளது. 2015-16ஆம் ஆண்டுக் கான லாபம் ரூ.100 கோடி, 2016-17-இல் ரூ.196 கோடி, 2017-18-இல் ரூ.258 கோடி, 2018-19இல் ரூ. 117 கோடி 2019-20இல் ரூ. 151 கோடி, 2020-21 ரூ. 225 கோடி. இதில் நஷ் டம் எங்கே இருக்கிறது?. இரண்டாவதாக, விநியோக இழப்பைக் குறைப்பதாக கூறுவதா கும். விநியோக இழப்பு 15 சதவிகி தம் என்று ஒன்றிய அரசு கூறுகிறது.

ஆனால், சண்டிகரில் உள்ள பொதுத் துறை விநியோக நிறுவனம் 9.5 சத விகிதம் மட்டுமே விநியோக இழப்பைக் கொண்டிருக்கிறது. இதிலும் திறமையின்மை எங்கே இருக்கிறது?.  மூன்றாவதாக, சண்டிகர் இந்தி யாவில் மிகக் குறைந்த கட்டண விகிதங்கள் கொண்ட டிஸ்காம் ஆகும். 150 யூனிட்கள் வரை பஞ் சாப்பில் ரூ. 3.49 ஆகவும், ஹரியானா வில் ரூ. 2.50 ஆகவும் சண்டிகரில் ரூ.2.5 ஆகவும் உள்ளது. பஞ்சாபில் 300 யூனிட்டுகளுக்கு மேல் உள்ள வாடிக்கையாளர்கள் ரூ.7.30 செலுத்த வேண்டும். ஹரியானாவில், 500 யூனிட்டுகளுக்கு மேல் உள்ள வாடிக்கையாளர்கள் ரூ. 7.10 செலுத்த வேண்டும். இதுவே சண்டி கரில், 400 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் வாடிக்கையாளர் களுக்கு ரூ. 4.65-க்கு மின்சாரம் கிடைக்கிறது.  ஆனால், தற்போது தனியார்மய மாக்கலால் சண்டிகரில் உள்ள நுகர் வோர் பெரும் இழப்பை சந்திப்பார் கள். அவர்களுக்கு மின் கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.