வெங்காயத்தை தொடர்ந்து சோளம் விலையும் வீழ்ச்சி தீபாவளி நேரத்தில் பரிதவிக்கும் மகாராஷ்டிரா விவசாயிகள்
மும்பை வெங்காயம் தான் மகா ராஷ்டிரா விவசாயி களின் முக்கிய பயிரா கும். ஆனால் சமீபகாலமாக வெங்கா யத்தை சந்தைக்குக் கொண்டு வரும் நேரத்தில், விலை வீழ்ச்சி அடைவ தால் விவசாயிகள் சோளத்திற்கு மாறி யுள்ளனர். தற்போது மாநிலத்தின் குறிப்பிட்ட சில இடங்களில் விவசாயி கள் வெங்காயத்திற்குப் பதிலாக சோளத்தைப் பயிரிட்டு வருகின்றனர். சோளத்திற்கு கடந்த ஆண்டிலிருந்து திருப்திகரமான சந்தை விலை கிடை த்து வந்தது. ஆனால், கடந்த 15 நாட்க ளாக சோளத்தின் விலையையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் தீபாவளியை எப்படி கொண்டாடுவது, குடும்பத்தினரிடம் நிலைமையை எப்படி கூறுவது என இரட்டை நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். மகாராஷ்டிராவில் மே மாதம் முதல் மழை பெய்து வருகிறது. இந்த கனமழையை சமாளித்து கடும் சிர மத்துக்கு இடையே விவசாயிகள் சோளத்தைப் பயிரிட்டனர். மழை நீர் வயலில் தேங்கியிருந்த போது, அதில் இருந்து கதிர்களை எடுத்து பல நாட் கள் காயவைத்து, அவற்றை அடித்து சோளங்களை பிரித்தெடுத்தனர். எதிர்பார்த்த அளவு விளைச்சல் கிடைக்கவில்லை என்றாலும், கிடைத்த சோளங்களை வைத்து இந்த ஆண்டு தீபாவளி செலவை சமாளிக்க லாம் என்ற நம்பிக்கையில் விவசாயி கள் இருந்தனர். ஆனால் வெங்கா யத்தைப் போல சோளத்தின் விலை யும் வீழ்ச்சியடைந்ததால் விவசாயி கள் கவலையில் உள்ளனர். இழப்பீடு இல்லை மாநிலம் முழுவதும் அதிக மழை யால் ஏற்பட்ட சேதத்திற்கு மகா ராஷ்டிரா பாஜக கூட்டணி அரசின் இழப்பீடு அறிவிப்பு இன்னும் தொலைக்காட்சி செய்திகள் மற்றும் நாளிதழ்கள் மூலமாக மட்டுமே கிடைக்கிறது. வங்கிக் கணக்கு களில் எதுவும் வரவில்லை. நிலைமை இவ்வாறு இருப்பதால் சோளத்தின் விலை வீழ்ச்சி தொடர்பாக மகா ராஷ்டிரா அரசு எவ்வித உதவியும் செய்யாது, நாங்களும் எதிர்பார்க்க வில்லை என விவசாயிகள் கூறி யுள்ளனர்.
