states

img

சபரிமலை தங்கத்தகடு திருட்டில் வழக்கில் 10 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு

சபரிமலை தங்கத்தகடு திருட்டில் வழக்கில் 10 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு

திருவனந்தபுரம் சபரிமலையில் உள்ள துவார பாலகர் சிற்பம் மீது பதிக் கப்பட்டிருந்த தங்கத்தகடு திருட்டை விசாரிக்கும் எஸ்ஐடி குழு  உன்னி கிருஷ்ணன் போற்றி, தேவசம்  வாரிய செயலாளராக இருந்த ஜெயஸ்ரீ உள்ளிட்ட 10 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. உன்னி கிருஷ்ணன் போற்றி கொண்டு வந்த தகடுகளில் இருந்து  தங்கம் அகற்றப்பட்டதாக சென்னை யில் உள்ள ஸ்மார்ட் கிரியே ஷன்ஸின் உரிமையாளர் பங்கஜ்  பண்டாரி கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, விசாரணை சென் னைக்கு நீட்டிக்கப்பட்டது. சிறப்பு புல னாய்வுக்குழு சென்னையில் கடந்த 2 நாட்களாக விசாரணையில் ஈடு பட்டுள்ளது. ஐயப்பன் பெயரில் நன்கொடை 2017 முதல் 2025 வரையிலான உண்ணிகிருஷ்ணன் போற்றியின் வருமான வரி பதிவுகளில், அவருக்கு  ஒரு பைசா கூட வழக்கமான வரு மானம் இல்லை என்றும், நன்கொடை யாளர்களிடமிருந்து கிடைத்த பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் தேவஸ்வம் விஜிலென்ஸ் ஏற்க னவே கண்டறிந்துள்ளது. சபரிமலை யில் நன்கொடை மூலம் பெறப்பட்ட  பணத்தை அவர் மோசடி செய்த தாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நன்கொடை என்ற பெயரில் பல  மாநிலங்களிலிருந்து வசூலான பணத்தை எடுத்து இந்த மோசடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு  காமாக்ஷி எண்டர்பிரைசஸ் என்ற  நிறுவனத்திலிருந்து அவரது கணக்கில் ரூ.10,85,150 டெபாசிட்  செய்யப்பட்டதும் கண்டறியப் பட்டுள்ளது. இதனிடையே நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி கே.டி சங்கரன் அக்.11,12 சனி, ஞாயிறு  ஆகிய இரண்டுநாட்கள் சபரிமலை யில் ஆய்வு செய்தார். அதைத் தொட ர்ந்து ஆரன்முளாவில் உள்ள தேவ சம் வாரியத்துக்கு சொந்தமான பாது காப்பு அறைகளையும் ஆய்வு செய்து 2 வாரங்களில் உயர்நீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய  உள்ளார். 2019 ஜுலை 10 அன்று திரு விதாங்கூர் தேவசம் வாரிய செயலா ளராக இருந்த ஜெயஸ்ரீ, வாரியத்தின்  முடிவைத் திருத்தி உண்ணி கிருஷ்ணன் போற்றியிடம் தங்கத் தகடுகளை ஒப்படைக்க பிறப்பித்த உத்தரவு தற்போது வெளியாகி உள்  ளது. தங்க திருட்டுக்கு இந்த உத்த ரவே வழிவகுத்ததாக கூறப்படுகிறது.