states

img

விலைவாசியை கட்டுப்படுத்தாவிட்டால் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பிருக்காது!

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் எச்சரிக்கை

ராஞ்சி, மார்ச் 26- “ஒன்றிய பாஜக அரசானது, பணவீக்கத்தை கட்டுப்படுத்தா விட்டால், பெண் சிசுக்கொலை, குழந்தை திருமணங்கள் அதி கரிக்கும். பெண்களுக்கு பாது காப்பற்றதாக நாடு மாறிவிடும்” என்று ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரும், ஜார்க் கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன், ஜார்க்கண்ட் சட்டப்பேர வையில், இதுதொடர்பாக மேலும் பேசியிருப்பதாவது: “நாட்டில் பணவீக்கம் அதி கரித்தால் வறுமை தலைவிரித் தாடும். சிலர் கூறுவதை போல் பெண் குழந்தைகளை சுமை யாக நினைக்கும் சூழல் ஏற்பட லாம். எனவே, பணவீக்கத்தை கட்டுப்படுத்தாவிட்டால் பெண்  சிசுக்கொலை, குழந்தைகள் திருமணங்கள் அதிகரிக்கும். மேலும், பணவீக்கத்தால் நாட்டு மக்கள் அதிகமாக பாதிக்கப்படு வார்கள். இது குழந்தைகளுக்கு கல்வி உள்பட அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடி யாத நிலையை ஏற்படுத்தும்.  எனவே, ஒன்றிய அரசானது பணவீக்கம், விலைவாசி ஏற்  றத்தைக் கட்டுப்படுத்த வேண் டும். இல்லாவிட்டால், நாட்டி லுள்ள பட்டியல் வகுப்பினர்,  பழங்குடியினர் மற்றும் பிற் படுத்தப்பட்ட மக்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள்.  வறுமை யில் வாடும் இவர்களை முன் னேற்ற மாநிலங்கள் முயற்சிக் கும்போது, தேசம் முன்னேற்ற  பாதையில் செல்லாவிட்டால் சரி யாக இருக்காது.  இவ்வாறு ஹேமந்த் சோரன் பேசியுள்ளார்.