states

img

ஆளுநர் மாளிகைகளை அதிரவைத்த விவசாயிகள்

புதுதில்லி, நவ.27- அரசமைப்பு தினத்தன்று (நவம்பர்  26) ஆளுநர் மாளிகைகளை முற்றுகை யிட்டு 50 லட்சம் விவசாயிகள் நாடு  முழுவதும் நடத்திய போராட்டம் ஒன்  றிய பாஜக அரசை உலுக்கியுள்ளது. சம்யுக்தா கிசான் மோர்ச்சா (ஐக்கிய விவசாயிகள் முன்னணி)  தலைமையில் பல்வேறு மாநிலங்க ளில் உள்ள ராஜ்பவன்களுக்கு முன்பு லட்சக்கணக்கான விவசாயிகள் நவம்பர் 26 சனிக்கிழமையன்று குவிந்தனர். தலைவர்கள் குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்  தனர். குறைந்தபட்ச ஆதார விலை யை சட்டப்படி நிறைவேற்ற வேண்  டும்; கடன் தள்ளுபடி அறிவிக்க வேண்டும்; மின் சட்ட திருத்த மசோ தாவை திரும்பப் பெற வேண்டும்; லக்கிம்பூர்கெரி படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்றிய உள் துறை அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி  நீக்கம் செய்யப்பட வேண்டும்; பயிர்  காப்பீட்டுத் திட்டம்; அனைத்து விவ சாயிகளுக்கும், விவசாய தொழிலா ளர்களுக்கும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.5000 வழங்க வேண்டும்; போராட் டத்தின் போது தொழிலாளர்கள், விவ சாயிகள் மீது தொடரப்பட்ட வழக்கு களை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஆளுநர் மாளிகைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆளுநர் மாளிகைகள் தவிர, 400 மாவட்ட தலைமை அலுவலகங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்பட்டது. 3000 மையங்களில் 50 லட்சம் பேர்  பங்கேற்றதாக தலைவர்கள் தெரி வித்தனர். விவசாயிகள் போராட்டத் தின் மையப்பகுதிகளான மகாராஷ் டிரா, பஞ்சாப், ஹரியானா, பீகார் மற்  றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் வர லாறு காணாத பங்கேற்பு இருந்தது. கேரளா, உத்தரப்பிரதேசம், கோவா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் போராட்  டங்கள் நடைபெற்றன. அகில இந்திய விவசாயிகள் சங்க  தலைவர்கள் சண்டிகரில் அசோக்  தாவ்லே, லக்னோவில் ஹன்னன் முல்லா, ஹரியானா பஞ்சகுலாவில் பி.கிருஷ்ணபிரசாத், ஜெய்ப்பூரில் அம்ராராம், போபாலில் பாதல் சரோஜ், கொல்கத்தாவில் அமல்  ஹல்டர், சென்னையில் பெ.சண் முகம், திருவனந்தபுரத்தில் எம்.விஜய குமார் பங்கேற்றனர். கேரளாவின் கண்ணூரில் நடைபெற்ற மாபெரும்  போராட்டத்தை எல்டிஎப் அமைப்பா ளர் இ.பி.ஜெயராஜன் தொடங்கி வைத்தார். விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மட்டுமின்றி பெண் கள், மாணவர்கள், தொழிற்சங்க ஊழியர்களும் திரண்டனர். டிசம்பர் 1 முதல் 11 வரை நாடா ளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களுக்கு பேரணியாக சென்று விவசாயிகள் மனு அளிக்க  உள்ளனர். விவசாயிகள் பிரச்சனை யை நாடாளுமன்றம் மற்றும் மாநி லங்களவையில் எழுப்ப வேண்டும்  என்று ஐக்கிய விவசாயிகள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.