பாட்னா, டிச.7- பீகார் மாநில தடுப்பூசி முகாம் ஒன்றில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாலிவுட் நட்சத்திரம் பிரி யங்கா சோப்ரா உள்ளிட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட தாக வெளியான பட்டியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் அர்வால் மாவட்டத்தின் கார்பி சமூக சுகா தார மையத்தில் தடுப்பூசி செலுத் தியவர்களின் பட்டியல் அண் மையில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போதுதான், இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டிருந்த பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய உள்துறை அமைச் சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிர பல பாலிவுட் திரை நட்சத்திரங் கள் அக்ஷய் குமார், பிரியங்கா சோப்ரா ஆகியோரின் பெயர் கள் இடம்பெற்றிருப்பது தெரி யவந்துள்ளது.
இவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டது மட்டுமல்லா மல், பீகார் மாநிலத்தில் ஆர்டி பிசிஆர் கொரோனா பரி சோதனை செய்து கொண்டதாக வும், சோதனையில் நெகட்டிவ் என வந்ததாகவும் அப்பட்டிய லில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்தப் பட்டியலின் புகைப் படம் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற் படுத்திய நிலையில், சம்பந்தப் பட்ட கணினி இயக்குநர்கள் இரண்டு பேர் தற்போது பணி யிடை நீக்கம் செய்யப்பட்டனர். உயர் அதிகாரிகளின் நெருக்கடி காரணமாகவே போலியாக பட்டியல் தயாரிக்கப்பட்டதாக அந்த டேட்டா ஆபரேட்டர்கள் இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் விரிவான விசார ணைக்கு உத்தரவிட்டுள்ளது.