ஆந்திராவில் அதீத கனமழை வாய்ப்பு
நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக வங்கக் கடலில் நிலப்பரப்புக்கு வெகு தொலைவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இந்த புயல் சின்னத் தால் தமிழ்நாட்டைப் போல ஆந்திரா விலும் கனமழை வெளுத்து வாங்கி வரு கிறது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக் கையில்,“அக்., 27, 28 ஆகிய 2 நாட்கள் ஆந்திர மாநிலத்தின் ஓரிரு இடங்களில் அதீத அளவில் கனமழைக்கு வாய்ப்புள்ளது” என அதில் கூறப்பட்டுள்ளது.
