states

தீக்கதிர் விரைவு செய்திகள்

லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப் பூர் அமலாக்கத்துறை அலுவ லகத்தில்,  அதிகாரியாகப் பணி யாற்றி வந்தவர் நவல் கிஷோர் மீனா. இவர் அந்நியச் செலாவணி மேலாண் மைச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் புகார்தாரருக்குச் சாதகமாக வழக்கை முடித்து வைப்பதற்காக, சம்பந்தப்பட்ட நபர்களிடம் ரூ.8 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளார்.இதுகுறித்து புகார்தாரர், 2015ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி மத்தியப் புலனாய்வு அமைப்பிடம் (சிபிஐ) புகார் அளித்தார். 2016ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி அவர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்து வந்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை அன்று நவல் கிஷோர் மீனாவை குற்றவாளி என தீர்ப்பு வழங்கி, 3 ஆண்டு காலக்கடுங் காவல் சிறைத் தண்டனை விதித்தும், ரூ.5.5 லட்சம் அபராதமும் விதித்தது. அம லாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்ச வழக்கில் சிக்கி மூன்றாண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை பெற்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“பாஜகவின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்”

கடந்த வாரம் ஊழல் வழக்கில் தொ டர்பு இருப்பதாக கூறி, சத்தீஸ்க ரின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா பாகேலை அமலாக்கத்துறை கைது செய்தது. சைதன்யா தற்போது ராய்ப் பூர் மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். அவரை சந்தித்த பின்பு காங்கிரஸ் பொதுச் செயலாளர் சச்சின் பைலட் சிறை வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறுகையில், “நான் சைதன்யா பாகேலை சந்தித்தேன். பாஜக மற்றும் அதன் ஒன்றிய, மாநில அரசுகள் தொடர்ந்து எதிர்கட்சிகளை மிரட்டுவதற்கும், அச்சுறுத்துவதற்கும் முயற்சிக்கின்றன என்று நாங்கள் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறோம். காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளும், இப்போது முன்னாள் முதலமைச்சர் பாகேலின் மகன் மீதான நடவடிக்கையும், பாஜகவின் அரசி யல் எதிரிகளின் குரலை அடக்க மத்திய புலனாய்வு நிறுவனங்கள் மூலம் சதித்திட்டம் நடந்துள்ளன. பாஜகவின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்” என அவர் கூறினார்.