states

உத்தரகண்ட், கோவாவில் இன்று தேர்தல்

புதுதில்லி,பிப்.13- உத்தரகண்ட் மற்றும் கோவா மாநில சட்ட மன்றத் தேர்தல் வாக்குப் ்பதிவு பிப்ரவரி 14 திங்க ளன்று நடைபெறுகிறது.  கோவா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர்,உத்தர கண்ட் ஆகிய 5 மாநிலங் ்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் உத்தரகண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி 14 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.  உத்தரகண்ட் மாநிலத் ்தில் உள்ள 70 சட்ட மன்றத் தொகுதிகளுக்கும், கோவாவில் உள்ள 40 சட்டமன்றத் தொகுதி களுக்கும் வாக்குப்்பதிவு நடைபெற உள்ளது. மேலும் உத்தரப்பிரதேசத் ்தில் 2வது கட்ட வாக்குப் ்பதிவு 9 மாவட்டங்களில் உள்ள 55 தொகுதிகளில் நடை பெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.