states

img

குற்றம்சாட்டப்பட்டோர் பட்டியலில் இடம்பெறாத எளமரம் கரீமின் இடைநீக்கம் விதிகளை மீறியது

புதுதில்லி, டிச. 1- நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நாடாளுமன்றத் தலைவருமான எள மரம் கரீம் சபை விதிகளை மீறியதாக கூறி இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார். ஆனால், மாநிலங்களவை வெளியிட்ட பட்டி யலில், சபை நடவடிக்கைகளை தொடர்ந்து தடைபடுத்தியதாகக் கூறும் உறுப்பினர்களில், எளமரம் கரீமின் பெயர் இடம்பெறவில்லை. ஆகஸ்ட் 11 ஆம் தேதியிட்ட மாநிலங்களவை வெளியீட்டில் (புல்லட்டின்), 33 எம்.பி.க்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 பேரில் எளமரம் கரீம் தவிர மற்ற அனைவரது பெயர்களும் பட்டியலில் உள்ளன. முக்கியமான மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவரை அதில் பங்கேற்க விடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அவையின் அன்றாட நடவடிக்கைகள் குறித்து, அவைச் செயலாளரால் (பொது) வெளி யிடப்படும்  அதிகாரப்பூர்வ ஆவணமே ‘புல்லட்டின்’ ஆகும். இது பேரவையின் அன்றாட செயல்பாட்டை விவரிக்கிறது. ஆகஸ்ட் 11 தேதியிட்ட புல்லட்டின், இடதுசாரி  எம்.பி.க்கள் கே.சோமபிரசாத், ஜான் பிரிட்டாஸ், டாக்டர்.வி.சிவதாசன், பினோய் விஸ்வம், எளமரம் கரீம் ஆகியோர் ஊடகங் களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், ஆளும் தரப்புக்கும், பாஜகவுக்கும் நாடாளுமன்றம் மற்றும் எதிர்க்கட்சிகள் மீது மரியாதை இல்லை என்பது மீண்டும் ஒருமுறை தெளிவாகி இருப்பதாக தெரிவித்தனர்.

மன்னிப்பு கோர சாவர்க்கர் அல்ல!

மன்னிப்பு கேட்டால் இடைநீக்கத்தை திரும்பப் பெறலாம் என்ற மாநிலங்களவை சபா நாயகரின் நிலைப்பாட்டை இடதுசாரி எம்.பி.க்கள் நிராகரித்தனர். எம்.பி.க்கள் எளமரம்  கரீம், பினோய் விஸ்வம், ஜான் பிரிட்டாஸ் ஆகி யோர், மன்னிப்பு கோர நாங்கள் சாவர்க்கர் அல்ல என்றும், தவறான நடவடிக்கைக்கு எதி ராக தொடர்ந்து போராடுவோம் என்றும் தெரி வித்தனர். ஆவணத்தில் பெயர் இல்லாத நிலை யில் கரீம் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப் பட்டது என்பதை விளக்குமாறு மாநிலங் களவை சபாநாயகரை பினோய் விஸ்வம் கேட்டுக்கொண்டார். இது, ஏதேனும் கட்சி  அலுவலகத்தில் இருந்து வரும் ஆலோசனை களின் அடிப்படையில் எம்.பி.க்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை என்று ஜான் பிரிட்டாஸ் கூறினார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்.பி.க்கள், புதனன்று (டிச.1) நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் தர்ணாவில் ஈடுபட்டனர். இடைநீக்கத்தை திரும்பப்பெற வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை யால் நாடாளுமன்றம் திணறியது. எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இடை நீக்கத்தை திரும்பப் பெறுமாறு மாநிலங் களவை தலைவருக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
 

 

;