கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பதவி பறிபோன நிலையில், கடந்த 6 மாதமாக ஓய்வெ டுத்து வருகிறார். இதனி டையே சினிமா ஒன்றில் அவர் நடித்துள்ளார். எடி யூரப்பா முதல்வராக இருந்த போது ‘நீட்’ தேர்வை எழுத முடியாமல் கஷ்டப்பட்ட மாணவிக்கு உதவிய தாகவும், அதன் மூலம் 350 கி.மீ. தொலைவில் இருந்தபடியே அந்த மாணவி தேர்வெழுதி வெற்றி பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த கதை ‘தனுஜா’ என்ற பெயரில் சினிமாவாக எடுக்கப்பட்ட நிலையில், அதில், முதல்வர் வேடத்தில் எடியூ ரப்பாவே நடித்துள்ளார்.