states

img

தில்லி, ஹரியானாவில் நிலநடுக்கம்

தில்லி, ஹரியானாவில் நிலநடுக்கம்

தில்லி, ஹரியானா மாநிலங்களில் வியாழனன்று காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வுகள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் பகுதி யை மையமாகக் கொண்டு காலை 9.04 மணியளவில், ரிக்டர் அளவில் 4.4 ஆகவும், 10 கி.மீ. ஆழத்திலும் நிலநடுக் கம் ஏற்பட்டது. ஜஜ்ஜார் தில்லிக்கு மிக அருகில் உள்ள பகுதி என்ற நிலையில், தில்லி புறநகர், காசியாபாத், குருகிராம், நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த மிதமான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை.