ஆளுநர் தமிழிசை தனது எல் லைக்கு உட்பட்டு பேச வேண் டும் என தமிழ்நாடு அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். “சனாதன ஒழிப்பு” தொடர்பான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சை பாஜகவினர் திரித்துக் கூறி மக்களை திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண் டதற்காகவே இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவை பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், சேகர்பாபு வழக்கம் போல தனது அமைச்சர் பணிகளை கவனித்து வருகிறார். இதனிடையே இந்து அற நிலையத் துறை சார்பில் 1000-வது கோவில் கும்பாபிஷேகம் கடந்த செப்.10 அன்று நடைபெற்றது. இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பதிவில், “இறை நம்பிக்கையாளர்கள் போற்றும் ஆட்சி என்றும் கூறியிருந்தார். முன்னதாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்த ரராஜன், சனாதனத்தை அழிப்போம் என்று சொல்வதற்கு முன்பாக இந்து சமய அறநிலையத் துறை வேண்டாம் என்று சொல்ல வேண்டும் என்றும் சாமி வேண் டாம் என்று சொல்பவர்களுக்கு உண்டி யல் மட்டும் வேண்டுமா” எனக் கேட்டி ருந்தார். இந்நிலையில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, “ஞாயிறன்று நடைபெற்ற செய்தியா ளர்கள் சந்திப்பில் “தமிழிசை சவுந்தர ராஜன் அவர் மாநிலத்தில் ஆற்ற வேண் டிய பணிகளை முதலில் செய்யட்டும். அவர் ஒன்றும் தமிழ்நாடு பாஜகவின் கொள்கை பரப்புச் செயலாளர் கிடை யாது. ஆளுநருக்கான பணிகளை அவர் புதுச்சேரியில் வைத்துக் கொள்ளட்டும். அவருக்கு ஏதாவது பதவி தேவை என் றால் பாஜக தலைமையிடம் கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு மீது இதுபோன்ற விமர்சனங்களை வைத்து பதவியைப் பெற நினைப்பது தவறு. தேவையில்லாத பிரச்சனைகளில் அவர் மூக்கை நுழைப்பதை நாங்கள் விரும்பவில்லை” என எச்சரிக்கை விடுத் துள்ளார்.