states

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பின்றி தீபாவளி

புதுதில்லி, நவ.7-  தீபாவளியை கொண்டாடும் நோக்கில் பட்டாசுகள் வெடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில், அதை மீறும் வகையில் ராஜஸ்தானில் பட்டாசு வெடிக்கப்படுவதாகவும், இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு மோசமடைவதாகவும் கூறி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட மனு நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு முன்பு  செவ்வா யன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீது கருத்துக்கூறிய நீதிபதி போபண்ணா, ‘பள்ளிகளில் நடைபெறும் விழிப்புணர்வு காரணமாக, குழந்தைகள் அதிகம் பட்டாசு வெடிப்பதில்லை. பெரிய வர்கள்தான் அதைச் செய்கிறார்கள். பெரி யவர்கள் குழந்தைகளை விட மோசமாக நடந்து கொள்கிறார்கள், பட்டாசுகளை அதிக மாக வெடிக்கின்றனர். அதனால் ஏற்படும் மாசு மற்றும் அசௌகரியம் பற்றி கவலைப் படுவதில்லை’ என்றார். மேலும், இரவு 10.30 மணி வரை பட்டாசு களை வெடிக்கலாம் என அனுமதி அளித் தால், இரவு பத்து மணிக்குள் பட்டாசுகளை  முழுமையாக வெடித்து காலி செய்துவிட வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் இருக்கிறது என்றும் தெரிவித்தார். நீதிபதி சுந்தரேஷ் கூறுகையில்,  “கொண் டாட்டங்கள் இருக்க வேண்டும்; அதே நேரத்தில் அது மிதமானதாக இருக்க வேண்டும். கொண்டாட்டங்கள் மூலம் ஒரு வர் மற்றவர்களிடத்தில் மகிழ்ச்சியை ஏற் படுத்தலாம், ஆனால், அது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது” என்றார்.  தொடர்ந்து தீபாவளியை முன்னிட்டு காற்று மற்றும் ஒலி மாசு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள தேவையான நட வடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். திரு விழாக் காலங்களில் மட்டுமல்ல; மற்ற நேரங்களிலும்கூட அரசு இதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இது ராஜஸ்தானுக்கு மட்டுமல்ல நாட்டின் அனைத்து மாநிலங் களுக்கும் பொருந்தும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.