வீட்டிற்கு நுழைந்ததால் “தீட்டு” ; வெள்ளாடு கொடுத்தால் தான் வீடு சுத்தமாகுமாம்! இமாச்சலில் சாதிவெறி குண்டர்கள் மிரட்டல்: 12 வயது தலித் சிறுவன் தற்கொலை
சிம்லா இமாச்சலப்பிரதேச மாநி லத்தின் சிம்லா அருகே உள்ளது லிம்ப்டா கிராமம். இந்த கிரா மத்தின் கோலி என்ற தலித் சமூகத்தைச் சேர்ந்த 6ஆம் வகுப்பு படிக்கும் ராஜு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற சிறுவன் அருகில் உள்ள கடையில் மளி கைப் பொருட்கள் வாங்கச் சென்றி ருந்தான். அந்த கடை ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த புஷ்பா தேவிக்குச் சொந்தமானது ஆகும். கடையில் யாரும் இல்லாததால் ராஜு, கடையின் பின்புறம் உள்ள புஷ்பா தேவியின் வீட்டுக்குள் சென்று, ”கடைக்கு வாருங்கள்” என அழைத்துள் ளான். உடனே புஷ்பா தேவி,”நீ ஒரு தலித். நீ எப்படி என் வீட்டுக்குள் வரலாம்” எனக் கூறி, அடித்து, உதைத்து அருகில் உள்ள கால்நடை அடைக்கும் இடத்தில் அடைத்து வைத்தார். தலித் சிறுவன் இரும்பு கம்பி வலை யை உடைத்து தனது வீட்டிற்கு சென்று, தனது பெற்றோரிடம் நடந்ததைக் கூற, ராஜுவின் பெற்றோர்கள்,”எப்படி என் மகனை இவ்வாறு செய்யலாம்” என தட்டிக் கேட்டுள்ளனர். உடனே புஷ்பா தேவி,”எனது வீட்டிற்குள் தலித் சமூ கத்தைச் சேர்ந்தவன் எப்படி வரலாம். அவன் வந்ததால் வீடு அசுத்தமாகி யுள்ளது. வீட்டை சுத்தம் செய்ய நீங்கள் ஒரு வெள்ளாடு தர வேண்டும். அதனை பலி செய்தால் என் வீடு சுத்தமாகும். இல்லை என்றால் வெள்ளாடு கொடுக்கும் வரை உங்கள் மகனை இங்கே அடைத்து வைப்பேன்” என சிலரு டன் இணைந்து மிரட்டியுள்ளார். பெற்றோருக்கும், புஷ்பா தேவிக்கும் வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டி ருக்கும் போது ராஜு,”தன் ஏழை பெற்றோர் எப்படி ஒரு வெள்ளாட்டை ஏற்பாடு செய்வார்கள்” என்று அருகில் இருந்த சக நண்பர்களிடம் கூறி, அருகில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டான். இந்த சம்பவம் செப்., 16ஆம் தேதி நிகழ்ந்தது. ராஜுவின் தாயார் செப்., 19ஆம் தேதி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். செப்., 20 அன்று பட்டி யலின மற்றும் பழங்குடியின வன்கொடு மை தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் புஷ்பா தேவி மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. ஆனால் தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவின் கீழ் புஷ்பா தேவி மீது வழக்குப் பதிவு செய்யப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. செப்., 16 அன்று சிறுவன் தற்கொலை செய்து கொண்டாலும் 3 வார காலத்திற்குப் பிறகு இமாச்சலப் பிர தேச பட்டியல் சாதி ஆணைய (HPSCC) தலைவர் குல்தீப் தீமன் “தி வயர்” இணையதள செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின் மூலம் இந்த சாதிய வன்கொடுமைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது-
