states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தில்லி எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி

தில்லியில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சிதைந்துவிட்டது. மாணவர்கள் பாதுகாப்பு பாஜக அரசுக்கு முக்கியமில்லையா? தில்லியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்குத் தொடர்ந்து வெடி குண்டு மிரட்டல்கள் வருவது மிகவும் கவலையாக இருக்கிறது. பாஜகவின் நான்கு இஞ்சின் அரசு பாதுகாப்பை வழங்கத் தவறிவிட்டது.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி

உத்தரப்பிரதேச அரசு இணைப்பு என்ற பெயரில்  சுமார் 5,000 அரசுப் பள்ளிகளை மூட உள்ளது. ஆசிரியர் அமைப்புகளின் கூற்றுப்படி, 27,000 பள்ளிகளை மூட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பாஜக அரசின் இந்த உத்தரவு கல்வி உரிமைக்கு எதிரானது மட்டுமல்லாமல், தலித், பிற்படுத்தப்பட்ட, பழங்குடி, சிறுபான்மை, பிரிவினருக்கும் எதிரானது.

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி

பீகார் சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி க்கு ஆதரவாக சுற்றுப்பயணம் செய்து வரும் மகாத்மா காந்தி யின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி ஐக்கிய ஜனதாதளம் கட்சிக் குண்டர்களால் தாக்குதல் நடத்தப்படும் நோக்கத்தில் அவதூறு செய்யப்பட்டுள்ளார். பீகார் மக்கள் அனைவரின் சார்பாகவும் துஷார் காந்தியிடம் கைகூப்பி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவர் மன்னிப்பார் என்று நம்புகிறேன்.

ஊடகவியலாளர் பார்த் எம்.என்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில்  752 ஆண்களுக்கு ஒரு பொது கழிப்பிடம் உள்ளது. ஆனால் 1,820 பெண்களுக்கு ஒரே ஒரு கழிப்பிடம் மட்டுமே உள்ளது. இந்த விகிதம் பெண்களின் அடிப்படை சுகாதாரத் தேவைகளை புறக்கணிக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.