தலைநகர் தில்லியில் 4 மாடி கட்டித்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
மேற்கு தில்லியில் உள்ள முன்ட்காவில் மூன்று அடுக்குமாடி அலுவலக கட்டடத்தில் வெள்ளிக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் முதற்கட்டமாக 27 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். 12 பேர் காயமடைந்தனர். மேலும் காணாமல் போன பலரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இன்று காலை மேலும் 3 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தில்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளதாக தீயணைப்புத் துறை தகவல் தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட உடல்கள் கருகிய நிலையில் இருப்பதால் உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே மரபணு சோதனை மூலமே உடல்கள் கண்டறிய நடவடிக்கை எடுக்கபடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பலரை காணவில்லை என்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தீ விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்தார். மேலும் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 10 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 நிவாரணம் அறிவித்துள்ளார்.