states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஎம் எம்.பி., சு.வெங்கடேசன்

முப்பத்தி முக்கோடி தேவர்கள் விண்வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது அனுமன்தான் முதன் முதலில் விண்வெளிக்கு போனது என்று அனுராக் தாக்கூர் கண்டறிந்துள்ளது சாதாரண விசயமல்ல, பாஜகவினரின் அறிவுச் செயல்பாடு நாளுக்கு நாள் அபாரமாகிக் கொண்டிருக்கிறது. நீல் ஆம்ஸ்டிராங் பெயரை அறிவியல் பாடத்திலிருந்து நீக்க பிஎம் ஶ்ரீ பள்ளிகளுக்கான சுற்றறிக்கையை தர்மேந்திர பிரதானிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கலாம்.

சிபிஐ கேரள மாநிலச் செயலாளர் பினோய் விஸ்வம்

முதலாளித்துவ சக்திகள், அனைத்தையும் அடிமைப்படுத்துகின்றன. லாபத்துக்கான ஓட்டத்தில் பலவீனமானவர்களை மிதிக்கின்றன. பெண்களைச் சுரண்டுகின்றன. இளைஞர்களை ஏமாற்றுகின்றன. இயற்கை காலடியில் மிதிக்கப்படுகிறது என்று மறைந்த போப் பிரான்சிஸ் கூறியுள்ளார். இது மார்க்சிய சித்தாந்தத்துடன் ஒத்துப்போகிறது.

சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் சஞ்சய் ராவத்

மோடி அரசு ஜனநாயகத்தையும் மக்கள் தேர்ந்தெடுத்த அரசையும் இடித்துத் தள்ள 130ஆவது அரசியலமைப்பு திருத்தத்தைத் திணிக்க முயல்கிறது. இந்த மசோதாவை மறுபரிசீலனை செய்ய உருவாக்கப்பட்ட கூட்டுக் குழு (JPC) ஒரு வெறும் நாடகம். இதுபோன்ற கூட்டுக் குழுவில் சிவசேனா பங்கேற்காது.

தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி

21 வயதில் இளைஞர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாகி மாவட்ட நிர்வாகத்தில் ஈடுபடுகிறார்கள். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வயதை 21 ஆகக் குறைப்பதில் என்ன தவறு? இதனை மறுபரிசீலனை செய்யலாம்.