சிபிஎம் எம்.பி., ஜான் பிரிட்டாஸ்
பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இந்த ஆண்டு ஜனவரியில் 79 டாலரிலிருந்து ஏப்ரலில் 64.62 டாலராக குறைந்தது. மேலும் 60 டாலருக்கும் கீழே வீழ்ச்சியடைந்தது. ஆனால் நம் நாட்டில் எரிபொருள் விலைகள் பெரும்பாலும் மாறாமலே உள்ளன. அப்படி என்றால் நாட்டில் பேசப்படும் ‘எரிசக்தி பாதுகாப்பு’ என்பது என்ன?
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா
கர்நாடக மாநிலத்தில் பொது இடங்கள், பள்ளிக்கூட வளாகங்கள் போன்றவற்றில் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நடைபெற தடைவிதிக்கும் வகையில் விதி கொண்டுவர அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த தடை ஆர்எஸ்எஸ் அமைப்பை பற்றியது அல்ல. அரசு அனுமதி இல்லாமல் எந்தவொரு அமைப்பும் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கப்படமாட்டாது.
ஊடகவியலாளர் ரவி நாயர்
கடந்த 11.5 ஆண்டுகளாக நேரடியான பத்திரிகையாளர் சந்திப்பை மோடி நடத்தவில்லை. இது மோடி இந்திய பத்திரிகையாளர்களை கண்டு எவ்வளவு அஞ்சுகிறார் என்பதைக் காட்டுகிறது. அவரது ஊடகக் கையாளுநர் ஹிரேன் ஜோஷியால் இந்திய முதன்மை ஊடகங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பின்னரும் கூட தொடர்கிறது.
என்எஸ்யுஐ தலைவர் வருண் சவுத்ரி
நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் பள்ளிகளில் ஆர்எஸ்எஸ்-ஏபிவிபியின் செயல்பாடுகள் தடை செய்யப்பட வேண்டும். இந்த நாடு ஆர்எஸ்எஸ்-ஏபிவிபியின் தரமற்ற சிந்தனையால் இயக்கப்படாமல், அரசியலமைப்பின் படியே இயங்க வேண்டும்.
