போலாவரம் திட்டத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிபிஎம் பொதுச்செயலாளர்
போலாவரம் அணை திட்டத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களின் பிரச்சனைகளை ஆய்வு செய்ய ஆந்திர மாநிலத்தில் (கோதாவரி மண்டலம்) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக வி.ஆர்.புரம் மண்டலத்தின் ராமாவரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் உரையாற்றினார். சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினரும் மாநிலங்களவை எம்.பி.,யுமான ஜான் பிரிட்டாஸ் உட்பட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.