தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளை நாளை அறிவிப்போம்
காங்கிரஸ் அறிவிப்பு
தில்லியில் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற காங்கிரஸ் சட்ட மாநா ட்டில் உரையாற்றிய மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “மக்களவைத் தேர்தலில் மோசடி செய்ய முடியும். 2024 மக்களவைத் தேர்தலிலும் மோசடி நடந்துள்ளது. இதை நிரூபிக்க தரவுகளும் ஆவணங்களும் இப்போது உள்ளன. இதை நாங்கள் நிரூபிக்கப் போகிறோம். ஒரு மக்களவைத் தொகுதி யின் வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்தபோது, மொத்தமுள்ள 6.5 லட்சம் வாக்காளர்களில் 1.5 லட்சம் வாக்கா ளர்கள் போலியானவர்கள் என்பதை நாங் கள் கண்டறிந்தோம். இந்த மோசடியால் தான் பாஜக வெற்றி பெற்றுள்ளது. அவர்கள் 15-20 தொகுதிகள் குறைவாகப் பெற்றிருந்தால், அவர் (பிரதமர் மோடி) பிரதமராகி இருக்க மாட்டார்” என கூறி யிருந்தார். இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் கடுமையான முறைகேடு களை ஆகஸ்ட் 5ஆம் தேதி காங்கிரஸ் கட்சி அம்பலப்படுத்தும் என்று அக்கட்சி யின் பொதுச் செயலாளர் கே.சி.வேணு கோபால் எம்.பி., தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கேரளாவின் திருச்சூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் பேசுகையில், “பீகாரில் தேர் தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) நாடாளு மன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் நாங்கள் எதிர்த்து வருகிறோம். தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அது அப்படி செயல்படவில்லை. தற்போது வெளியிடப்பட்டுள்ள பீகார் வரைவு வாக்காளர் பட்டியலில் பலரது பெயர்கள் விடுபட்டுள்ளன. நியா யமான முறையில் ஜனநாயகம் எவ்வாறு செயல்பட முடியும்? தேர்தல் ஆணை யத்தின் கடுமையான முறைகேடுகள் குறித்து வரும் 5ஆம் தேதி பெங்களூரு வில் நாங்கள் வெளிப்படுத்த உள்ளோம். அதன்பின்னர் ஆகஸ்ட் 7ஆம் தேதி “இந் தியா” கூட்டணியின் தலைவர்கள் ஒன்று கூடும் நிகழ்வு தில்லியில் நடைபெற உள்ளது” என அவர் கூறினார்.