states

புரட்சியாளர் அச்சுதானந்தன் என்.சங்கரய்யா வாழ்த்து

99 வயதை எட்டியுள்ள கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும்  தோழர் வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு, அவருடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய 32 தலைவர் களில் ஒருவரும் நூற்றாண்டைக் கடந்து வாழும் வரலாறாக திகழும் மகத்தான தலைவருமான என்.சங்கரய்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தி வருமாறு: இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர் களில் ஒருவரும் கேரள மக்களின் அன்புக்குரிய தலைவருமான தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யை உருவாக்கிய  32 தோழர்களில் ஒருவர். கேரள முதல்வராகவும் சிறப்பாக பணியாற்றியவர். இன்றும் கம்யூனிஸ்ட்  இயக்கத்திற்கு உத்வேகமாகவும் ஆதர்ச சக்தியாகவும் இருக்கக்கூடிய புரட்சியாளர் அச்சுதானந்தன் அவர்களுக்கு எனது  இதயங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.