states

“ஐ.நா., தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது வெட்கக் கேடானது”

பாலஸ்தீனம் தொடர்பாக ஐ.நா.சபையில்  மனிதாபிமான அடிப்படையில் கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்த செயல்  வெட்கக்கேடானது என்று காங்கி ரஸ் பொதுச் செயலாளர் பிரி யங்கா காந்தி கண்டனம் தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர்  மேலும் கூறுகையில், “காசாவில்  போர் நிறுத்தத்திற்கு வாக்களிப்ப தில் இருந்து நமது நாடு விலகியி ருப்பது எனக்கு அதிர்ச்சியும் வெட்கமும் அளிக்கி றது. நமது நாடு அகிம்சை மற்றும் உண்மையின் கொள்கைகளின் அடிப்படையில் நிறுவப்பட்டது. நமது சுதந்திரப் போராளிகள் தங்கள் இன்னுயிர் களை இந்த கொள்கைகளுக்காக தியாகம் செய்தி ருக்கிறார்கள். மனிதகுலத்தின் ஒவ்வொரு சட்டமும் தூள் தூளாக்கப்படுவதையும், உணவு, தண்ணீர், மருத்துவப் பொருட்கள், தகவல் தொடர்பு, மின்சா ரம் போன்றவை லட்சக்கணக்கான மக்களுக்குத் துண்டிக்கப்படுவதையும், பாலஸ்தீனத்தில் ஆயி ரக்கணக்கான ஆண்களும், பெண்களும், குழந்தை களும் அழிக்கப்படுவதையும் அமைதியாகப் பார்த் துக்கொண்டு நிற்பது இந்த கொள்கைகளுக்கு எதி ரானது. மனிதாபிமான போர் நிறுத்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது அவமானகரமானது” எனக்  கூறி கண்டனம் தெரிவித்துள்ளார்.