states

5 வயதுக்குட்பட்ட குழந்தை இறப்பு கேரளாவில் குறைவு: ஆய்வில் தகவல்

புதுதில்லி, மே 28- நாட்டிலேயே ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கையில் கேரளாவில்தான் மிகக் குறைவு என தேசிய  குடும்ப நல ஆய்வறிக்கையில் தெரியவந் துள்ளது. உத்தரபிரதேசத்தில் குழந்தைகள் இறப்பு அதிக அளவில் உள்ளது. கேரளாவில் 1000 பிறப்புகளுக்கு 5.2  இறப்புகள் உள்ளன. உ.பி.யில் 60 குழந்தை கள். பீகாரில் 56 ஆக இறப்புகள் உள்ளன. 59 மாதங்கள் ஆன குழந்தைகளின் வளர்ச்சி  தேக்க நிலை மிகக் குறைவான விகிதங்களில் கேரளாவும் ஒன்று. 99 சதவிகித பிறப்புகள் கேரளாவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.  இந்த அறிக்கை 2019-2021 காலகட் டத்தை உள்ளடக்கியது. அதே நேரத்தில், பிறப்பு விகிதத்தில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டது. கேரளத்தில் ஒரு பெண் பிரசவிக் கும் குழந்தைகளின் எண்ணிக்கை 2015-16 இல் 2.2 ஆக இருந்தது, தற்போது அது இரண்டாக குறைந்துள்ளது.  பீகார், மேகாலயா, உத்தரபிரதேசம், ஜார்கண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில்  பிறப்பு விகிதம் 22 க்கு மேல் உள்ளது. நாட்டின் பெரும்பாலான மக்கள் தொகை 19 வய துக்குட்பட்டவர்கள். 12 சதவிகிதம் பேர் மட்  டுமே 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். பெண்கள் பாதுகாப்பிலும் கேரளா  முன்னணியில் உள்ளது. கர்நாடகாவில் கண வனால் உடல்ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்  ளாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகம்  - 44.4 சதவிகிதம். கேரளாவில் இது 9.8 சத விகிதம் மட்டுமே.

;