states

img

ஆர்எஸ்எஸ் முகாம்களில் சிறார் மீது வன்கொடுமைகள்: நிதிஷ் முரளீதரனுக்கு எதிராக அனந்து மரண வாக்குமூலம்

ஆர்எஸ்எஸ் முகாம்களில் சிறார் மீது வன்கொடுமைகள்  :   நிதிஷ் முரளீதரனுக்கு எதிராக அனந்து மரண வாக்குமூலம்

கோட்டயம்        4 வயது முதல் ஆர்எஸ்எஸ் முகாமில் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளா னதாக  கோட்டயம் அனந்து (26) என்கிற பொ றியாளரின் மரண வாக்குமூலம்  வெளியாகி நாட்டையே அதிர வைத்துள்ளது. கேரளத்தில் கோட்டயம் எலிக்குளத்தைச் சேர்ந்தவர் அனந்து அஜி. பொறியாளரான இவர் இன்ஸ்டாகிராமில்  தனது தற்கொலைக்கான கார ணத்தை பதிவு செய்துள்ளார்.  கண்ணன் என்று அழைக்கப்படும் நிதிஷ் முரளீதரன் என்கிற ஆர்எஸ்எஸ் தலைவரால் அவர் 4வயது முதல் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகக் கூறப்பட்டுள்ளது. முகாம்களில் அனந்து சந்தித்த கொடுமைகளை விவரிக்கும் வீடியோ போலீசாருக்கு கிடைத்துள்ளது. இது அவரது மரணத்திற்குப் பிறகு வெளியாகும் வகையில் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டதாகும். ஆர்எஸ்எஸ் கிளைகள் மற்றும் முகாம்க ளில் குழந்தைகளுக்கு எதிராக கடுமையான பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாக அனந்து கூறுகிறார். இன்ஸ்டாகிராமில் முதலில் வெளியிடப்பட்ட தற்கொலைக் குறிப்பில் என்எம் (NM) என்ற முதலெழுத்துக்கள் மட்டுமே இருந்தன. அது குறித்து விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது மரண வாக்கு மூலம் காணொலியாக வெளியானது. காண்போரை அதிர வைக்கும் மிகவும் உருக்கமான அனந்துவின் மரண வாக்குமூலம் இது.  எனது மரணத்தை வெளிப்படுத்த இங்கே வந்திருக்கிறேன். எதற்காக இந்த தற்கொலை என்கிற சந்தேகங்கள் எழும். இந்த காணொலி உங்களுக்கு அதை தெளிவுபடுத்தும். முதலில் என்னை நான் அறிமுகம் செய்கிறேன். எனது பெயர் அனந்து அஜி.  26 வயது. பொறியா ளர். எளிதில் நானாக யாரிடமும் பேசும் பழக்கம் எனக்கு இல்லை. ஒதுங்கி வாழ்பவன். ஏன் இப்படி ஆனது என்று இந்த காணொலி உங்களுக்கு தெளிவுபடுத்தும். நான் ஒரு ஒசிடி நோயாளி. ஒன்றரை ஆண்டுகளாக இதற்கான தெரப்பி எடுத்துக் கொள்கிறேன். கடந்த ஆறு மாதங்களாக 7 வகையான மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறேன். நான் பாலியல் ரீதியாக பாதிப்புக்குள்ளாக்கப்பட்டதே இதற்குக் காரணம்.  மூன்று நான்கு வயதிலேயே வீட்டுக்கு அருகில் உள்ள ஒருவரால் தொடர்ச்சியாக பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத் தப்பட்டேன். இதற்கு ஆதாரம் உள்ளதா. என்றால் இல்லை. பயம் தான் உள்ளது. ஆதா ரமாக இந்த குறிப்பு தான் உள்ளது. (ஒரு நோட்டு புத்தகத்தை எடுத்துக்காட்டுகிறார்).  எனது வாழ்க்கையின் சிறப்பு என்றால் அம்மாவும் சகோதரியும் தான்.  அவர்களால்தான் நான் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்தது. இது போன்ற அம்மாவும் சகோதரியும் கிடைக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஆனால் நல்ல மகனாகவும் அண்ணனாகவும் என்னால் இருக்க முடியவில்லை. இப்போது கூட அவர்க ளை வேதனைப்படுத்துகிறேன். (அழுகிறார்).  எப்படி இந்த காணொலியை முடிப்பது என்று  தெரியவில்லை. என்னை பல இடங்களில்  ஆண்கள்  பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளா க்கி இருக்கிறார்கள்.  இந்த காணொலியை காணும் நீங்கள், பழகக் கூடாத ஒரு கும்பல் உள்ளது என்றால் அது ஆர் எஸ் எஸ். சோ கால்டு சங்கீஸ். அவர்களது முகாம்கள், நிகழ்ச்சிகள்  நடக்கும் இடங்களில் எல்லாம் அது நடக்கும். நான் அவர்களது ஐடிசி ஒடிசி முகாம் கள் எல்லாம் பங்கேற்று இருக்கிறேன். மனரீதியாக, உடல் ரீதியாக, பாலியல் ரீதியாக, எனக்கு அந்த அனுபவம்  ஏற்பட்டுள்ளது. அதற் கான சான்று கேட்டால் என்னிடம் இல்லை. வாழ்க்கையில் ஒருபோதும். ஆர் எஸ் எஸ் காரர்களுடன் பழகக் கூடாது. எனக்கு மட்டுமல்ல பலருக்கும், பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ளது.   என்னை தவறாகப்  பயன்படுத்தியவர் பெயர் நிதிஷ் முரளீதரன். எல்லோரும் அறிந்த கண்ணன் சேட்டன்.  (அழுகையுடன் கன்னத்தில்  அறைந்து கொள்கிறார்). லைஃப்லாங் ரேப் செய்தார்.  ஓராண்டுக்கு முன்புதான் இதை தெரிந்து கொண்டேன். இப்போது திருமணம் செய்து கொண்டு அவர் நன்றாக இருக்கிறார்.  எனக்கு வாழப்பிடிக்கவில்லை என  தெரி வித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இன்ஸ்டாகிராமில் தற்கொலைக் குறிப்பை வெளியிட்ட பிறகு, திருவனந்தபுரம், தம்பானூரில் உள்ள ஒரு லாட்ஜில் அனந்து தற்கொலை செய்து கொண்டார்.