states

உச்சபட்ச குற்றச்சாட்டு! முதல்வரை மாற்றுக!

மணிப்பூர் நெருக்கடி குறித்து உச்சநீதி மன்றத்தின் இடித்துரை வெளியான பின்னணியில் பாரதிய ஜனதா கட்சி முதல்வ ரை மாற்ற வேண்டும். மே 3 ஆம் தேதி தொடங்கிய இனக் கலவரம் இன்னும் தணிக்கப்படாதது குறித்து உச்சநீதிமன்றம் மணிப்பூர் அரசாங்கத்தை வன்மையாகக் கண்டித்து உள்ளது. 6500 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டி ருந்தாலும் ஒரு சிலரே கைது செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில் வன்முறை தொடர்பாக காவல்துறையினரின் நடவடிக்கைகளையும் அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்த கூடுதல் விவரங்களையும் கேட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 7ஆம் தேதி அடுத்த விசார ணையின் போது மணிப்பூர் காவல்துறை இயக்குனர் ஜெனரல் நேரில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டது. கும்பல் வன்முறையை எதிர்கொள்வதில் சட்டம் மற்றும் அரசியல் இயந்திரங்கள் முற்றிலும் சீர்குலைந்துள்ளன என்று குறிப்பிட்ட உச்சநீதிமன்றம் அதனை விசாரிக்கும் மாநில காவல்துறையின் திறமை குறித்தும் கேள்வி எழுப்பி உள்ளது.

முதல்வர் தொடர  எவ்விதத் தகுதியுமில்லை

ஒரு கும்பலால் நிர்வாணமாக அணி வகுப்பு நடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப் பட்ட இரண்டு பெண்கள்,காவல்துறை மற்றும் மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணை மீது நம்பிக்கை இல்லை என்று முறையிட்ட னர். பல வாரங்களாக நீடித்த வன்முறை மற்றும் மணிப்பூர் அரசாங்கத்தின் வெட்கக்கே டான பாகுபாடுகளுக்குப் பிறகு வெளியான,  இந்த பெண்கள் தாக்கப்பட்ட கொடூரமான வன்முறையைப் படம் பிடித்த ஒரு வீடியோ  புழக்கத்தில் இருந்தது நீதிமன்றத்தின் தலை யீட்டை தூண்டியது. மேலும் இதுபோன்று வழக்குகள் வந்துள்ள நிலையில் உச்ச நீதிமன்றம் தான் மேற்கொண்ட விசாரணை யில் தன் தணிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் மணிப்பூர் முதல்வர்  பைரேன் சிங் முதல்வராக தொடர எவ்வித  தகுதியும் இல்லை.ஆனால் அரசியல் கார ணங்களுக்காக பாரதிய ஜனதா கட்சி அவரை  பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதால் நடந்த எது ஒன்றுக்குமே அவர் பொறுப்பேற்காமல் தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார்.

அரசின் துணையால் தான் நீண்டகாலம் நீடிக்கும்

இந்தியாவில் நடந்துள்ள வகுப்புவாத மோதல்களின் வரலாறு,கும்பல் வன்முறை என்பது அரசின் துணை இருந்தால் மட்டுமே நீண்ட காலம் நீடிக்கும் என்பதை தெளிவாக்குகிறது. சிக்கல் தெரியத் துவங்கிய உடனே காவல்துறை விரைந்து சென்று நடவடிக்கை எடுப்பது ஒருபுறம் இருக்கட்டும். அந்த குற்றவாளிகள் யார் என்று பதிவு செய்வது கூட கடினமாக உள்ளது. சலிப் பூட்டக் கூடியதாகவும் அது மாறிவிடுகிறது. மணிப்பூரில்  வன்முறை தீவிரமடைவதை காவ ல்துறை தடுப்பதில் தவறிவிட்டது என்பது மட்டுமல்ல, விரைந்து தடுக்க முடியாத வகையில் அதை கும்பல் வன்முறையாக எளிதாக மாற்றிவிட்டதாகவும் கூறப்படுகிறது.தங்கள் கடமையில் தவறிழைத்த காவலர்க ளும் வன்முறைக்கு துணை நின்றவர்களும் சட்டத்தின் முன் கறாராக நிறுத்தப்பட வேண்டும். மேலும் நாட்டின் அரசியல் தலை மையிடமிருந்து வலிமையான சமிக்ஞைகள் வரவேண்டும்.  எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் சில இடங்களில் நடக்கும் குற்றங்களோடு ஒப்பிட்டு மணிப்பூர் நிலைமையின் தீவிரத்தை மறுப்பது என்பது துரதிஷ்டவசமானது. மணிப்பூர் நிலைமையின் தீவிரத்தை அடிக்கோடிட்டு காண்பிக்கும் போது நீதிமன்றம் அதனை கண்டித்து உள்ளது. மாநிலத்திற்கு வருகை தந்துள்ள இந்தியாவின் எதிர்க்கட்சித் தலை வர்கள் 21 பேர் கொண்ட குழு புதன் அன்று ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்திக்க உள்ளது. பிரதமரின் அறிக்கைக்கான கோரிக்கை நிறைவேறாவிட்டாலும், மாநிலங்க ளவையில் விவாதத்தை நடத்திட இந்த குழு ஒப்புக்கொள்ள வேண்டும். தாங்கள் மணிப்பூரில் கண்ட நிலைமையின் விவரங்க ளை நாட்டு மக்களிடம் முன்வைக்க இது ஒரு வாய்ப்பாக இருக்கும்.

நன்றி: தி  ஹிந்து ஆங்கில நாளிதழ் 
தலையங்கம் (2.8.23),
 தமிழாக்கம்: கடலூர் சுகுமாரன்