states

பத்தாம் வகுப்பு தேர்வில் பெண்களை அவமதிக்கும் கேள்விகள் நீக்கம்

புதுதில்லி,டிச.15- 10 ஆம் வகுப்பு ஆங்கில தேர்வு கேள்வித் தாளில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய கேள்விகளை,கடும் எதிர்ப்பால் சிபிஎஸ்இ நீக்கியுள்ளது.  சி. பி.எஸ். இ 10 ஆம் வகுப்பு தேர்வின் கேள்வித் தாளில் “வாசிப்பு உரைநடை பகுதி” (Comprehension) இடம் பெற்றுள் ளது. அதில் குடும்ப அமைப்பு மற்றும்  பெண்களைப் பற்றி மிகவும் பிற்போக்கான கருத்துக்களை கொண்ட கேள்வி இடம் பெற்றுள்ளது.இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள்,கல்வி யாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்பின்னரே, 10 ஆம் வகுப்பு ஆங்கில தேர்வில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய கேள்வி நீக்கப்படுகிறது என்றும் அந்தக் கேள்விக்கு பதிலளித்த அனைவருக்கும் மதிப்பெண் வழங்கப்படும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.  நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று சர்ச்சைக் குரிய கேள்வி நீக்கப்பட்டுள்ளது.  ஒன்றிய பாஜக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனி யாகாந்தி மக்களவையில் வலியுறுத்தினார்.  மக்களவையில் இருந்து காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.