states

img

முதல் முறையாக சாதிவாரி மக்கள்தொகை: விபரங்களை வெளியிட்ட பீகார் அரசு

நாடு விடுதலை அடை வதற்கு முன்னர் பிரிட்டிஷார் காலத்  தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த புள்ளி  விவரங்களின் அடிப்படையி லேயே இந்நாள் வரை இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வரு கிறது. அதன் பின்னர் பல ஆண்டு  காலமாக சாதிவாரி கணக்கெ டுப்பு தொடர்பாக கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. 1980, 1990களில்  இடஒதுக்கீடு விவகாரம் முழு வீச்சாக உயிர்த்தெழுந்த போது இந்த கோரிக்கை தீவிரமடைந்தது. இதன்பின்னர் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் சாதிவாரி  மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒன்று நடத்  தப்பட்டது. ஆனால் அந்த புள்ளி விவரங்கள்  முழுமையாக இல்லை என கருத்து தெரி விக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், பீகாரில் ஆளும் ஜனதா  தளம், ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ்  கூட்டணி அரசு சாதிவாரி கணக்கெடுப்பு  நடத்திய நிலையில், கணக்கெடுப்பு விவ ரங்களை வெளியிட்டுள்ளது. அதில், பீகார் மாநிலத்தில் மொத்த மக்கள் தொகை 13 கோடி  என்றும் அதில் பிற்படுத்தப்பட் டோர் 27.13 சதவீதம், மிகவும் பிற்  படுத்தப்பட்டோர் 36.01 சத வீதம், பிற்படுத்தப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 63.14 சதவீதம், பொதுப் பிரிவினர் 15.52 சதவீதம் தாழ்த்தப்பட்ட மக்கள் 19.65 சதவீதம், பழங்குடி இன  மக்கள் 1.69 சதவீதம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. மதரீதியான கணக்கெடுப்பு: இந்துக்கள் 81.99 சதவீதம்; முஸ்லிம்கள் 17.7 சதவீதம்; கிறிஸ்தவர்கள் 0.05 சதவீதம்; சீக்கியர்கள் 0.01 சதவீதம்; பவுத்தர்கள்- 0.08 சதவீதம் ; இதர மதத்தினர் 0.12 சத வீதம். சாதி அடிப்படையில்: யாதவர்கள் : 14 சதவீதம், குஷாவா 4.27 சதவீதம், பிராமணர்கள் 3.65 சதவீதம், முஷா கர்- 3 சதவீதம், குர்மி 2.87 சதவீதம், பூமிகார்-  2.86 சதவீதம்