“பிரபலமான பாட கர்கள் பலர் இருந்தா லும், எனக்கு எப்போ தும் பிடித்தமான பாட கர் லதா மங்கேஷ்கர் மட்டும்தான். சோம்நாத் நகரில் இருந்து அயோத்தி வரை, நான் ‘ராம் ரத யாத்திரை’ மேற்கொள்ளவிருந்தபோது அவர் எனக்கு மிகவும் அழகான “ராம் நாம் மெய்ன் ஜாது அய்ஸா, ராம் நாம் பாயீ” என்ற வரிகள் கொண்ட ‘ராமர் பஜ னை’யை அனுப்பினார். அந்த பஜனை தான் எனது ரத யாத்திரையின் அடை யாளப் பாடலாக மாறியது” என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கூறி யுள்ளார்.