பேருந்தில் தீ விபத்து: 20 பேர் பலி
ராஜஸ்தான் மாநிலத்தில் பயணி கள் பேருந்து ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 20க்கும் மேற் பட்டோர் பலியாகியுள்ளனர். செவ்வாயன்று பிற்பகல் ராஜஸ்தானின் ஜெய்சால்மரிலிருந்து ஜோத்பூர் நகரை நோக்கி தனியார் பேருந்து ஒன்று 57 பயணிகளுடன் புறப்பட்டது. ஒரு சில மணி நேரத்தில் அந்தப் பேருந்தின் பின்புறத்தில் திடீரென தீப்பற்றி பேருந்து முழுவதும் வேகமாகபரவியது. இந்த விபத்தில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 15 பயணிகள் கடு மையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பதற்றத்தில் பயணிகளால் அவ சரமாக வெளியேற முடியாமல் போன நிலையில் அவர்கள் தீயில் சிக்கி இருக்க லாம் எனக் கூறப்படுகிறது. ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது டன், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள் ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தின ருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள் ளார். மேலும் தீ விபத்தில் உயிரிழந்தவர்க ளின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாயும் காயமடைந்தோர் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.