states

img

பணவீக்கத்தைக் குறைப்பதில் கேரள முன்மாதிரியை கற்றுக்கொள்ள வேண்டும்

கண்ணூர், மே 21- பணவீக்கத்தைக் குறைப்பதில் இந்தியாவுக்கே கேரளா முன்னோடியாகத் திகழ்கிறது என்று பிருந்தா காரத் கூறினார். மக்கள் நலனுக்கு சிறந்த உதாரணம் என்று தங்களை புகழ்ந்துகொள்ளும் ஆம் ஆத்மி கட்சியும், கெஜ்ரிவாலும் கேரளாவின் வளர்ச்சி மாதிரியை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். கண்ணூர் பிரஸ் கிளப் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் வெள்ளியன்று (மே 20) சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறியதாவது:  எல்டிஎப் அரசு கேரளாவில் மாவேலி ஸ்டோர்ஸ் மூலம் 13 அத்தியாவசியப் பொருட்களை பல ஆண்டுகளாக விலை உயர்த்தாமல் விநியோகம் செய்து வருகிறது. அத்தியாவசியப் பொருட்களை சந்தை விலையை விட 30 முதல் 50 சதவிகிதம் குறைவாக கேரள அரசு வழங்கி  வருகிறது.  ஆனால், ஒன்றிய அரசு, விவசாயி களிடம் இருந்து நேரடியாக கோதுமையை கொள்முதல் செய்யாமல் பெரிய வியாபாரிகள் கொள்ளை லாபம் ஈட்டும் வாய்ப்பை உருவாக்கி வருகிறது. வழிபாட்டுத் தலங்கள் அரசியல் மையங்களாக மாற்றப்படுகிறது

அரசமைப்புச் சட்டம் அல்ல, புல்டோசர்கள் இப்போது இந்தியாவின் அடையாளமாகிவிட்டன. புல்டோசரை ஒரு இயந்திரமாக பார்க்கக் கூடாது. இது  ஒன்றிய அரசின் அரசியல் நிகழ்ச்சி நிரல் மற்றும் இந்துத்துவா சித்தாந்தத்தின் அடையாளம். இந்தியாவின் ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதி ஆகியவற்றின் ஆணிவேரை அறுக்கும் கொள்கைகளை அவர்கள் செயல்படுத்தி வருகின்றனர். வழிபாட்டுத் தலங்களைக் கூட குறுகிய அர சியல் மையங்களாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பாஜகவின் அரசியல் அநீதிகளுக்கு எதிராக இதுவரை கெஜ்ரிவாலால் வலு வான நிலைப்பாட்டை எடுக்க முடிய வில்லை என குற்றம்சாட்டினார்.

புல்டோசர் ராஜ் நடைமுறைப்படுத்தப்பட்ட பத்து  நாட்களுக்குப் பிறகுதான், அவர் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த முன்வந்த தாகவும் அவர் கூறினார்.  திருக்காக்கரை இடைத்தேர்தலில் கிட்டெக்ஸ் நிறுவன உரிமையாளர் ஷாபு  ஜேக்கப்புடன் ஆம்ஆத்மி கரம்கோர்த்துள் ளது குறித்து கூறுகையில், கேரளாவில் தொழில் நிறுவனங்களுடனான கூட்டணி அரசியல் கட்சிக்கு ஏற்றதல்ல என்றும் பிரச்சாரத்தில் இடதுசாரிகள் மிகுந்த நம்பிக்கையுடன் முன்னேறி வருகின்றனர்.  இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கண்ணூர் மாவட்டச் செய லாளர் எம்.வி.ஜெயராஜன் உடனிருந்தார்.

;