பீகார் கிராமத்தில் சடங்குகள் செய்ய பிராமணர்களுக்குத் தடை
பாஜக ஆளும் உத் தரப்பிரதேச மாநிலத்தில் “கதாகாலட்சேபம் (ஆன்மீக கதை சொல்பவர்)” செய்யும் முகுந்த்ணி சிங் யாதவ் பிர பலமானவர். இவர் தனது குழுவினருடன் கடந்த 15 வரு டங்களாக மாநிலம் முழு வதும் கதாகாலட்சேபம் செய்து வருகிறார். இத்தகைய சூழலில் 2 வாரத்திற்கு முன்பு முகுந் த்ணி சிங் யாதவ் மேற்கு உத்த ரப்பிரதேச மாநிலத்தின் எட் டாவா மாவட்டம் தந்தர்பூர் கிராமத்தில் கதாகாலட்சே பம் செய்ய அழைக்கப் பட்டார். அப்போது,”நீ பிராம ணர் இல்லாமல் எப்படி கதா காலட்சேபம் செய்யலாம்” எனக் கூறி, பிராமணர் சமூகத் தைச் சேர்ந்த கும்பல் கொலை வெறித் தாக்குதல் நடத்தியது. அது மட்டுமல்லா மல், மொட்டை அடித்து விரட்டியது. மேலும் முகுந் த்ணி சிங் யாதவின் உதவியா ளர் சந்த் குமார் யாதவும் தாக்குதலுக்கு உள்ளானார். இதுதொடர்பான வீடியோ பதிவு சமூக வலைதளங்க ளில் வைரலானது. “ஆன் மீகக் கதை சொல்லக் கூட சாதி முக்கியமா?” என்ற கேள் விகளுடன் நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்தன. இந்நிலையில், எட்டாவா மாவட்ட தாக்குதல் சம்பவத் தின் எதிரொலியாக பீகார் மாநிலத்தின் ஒரு கிராமத் தில் சடங்குகள் செய்யும் பிராமணர்களுக்கு தடை விதித்து அறிவிப்புப் பலகை கள் வைக்கப்பட்டுள்ளன. மோதிஹாரி மாவட்டத்தில் உள்ள திகுலியா கிராமத் தில் பல இடங்களில் அறி விப்புப் பலகைகள் வைக்கப் பட்டுள்ளன. அதில்,”இந்த கிராமத்தில் பிராமணர்கள் பூஜை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது” என எழுதப்பட்டுள்ளது.