states

img

பினராயி விஜயன் இல்லத்திற்கு  வெடிகுண்டு மிரட்டல்

பினராயி விஜயன் இல்லத்திற்கு  வெடிகுண்டு மிரட்டல்

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயாக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல  மைச்சராக பினராயி விஜயன் செயல் பட்டு வருகிறார். இந்நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள முதலமைச்சர் பினராயி விஜய னின் அதிகாரப்பூர்வ இல்லமான கிளிப்  ஹவுஸுக்கு ஞாயிற்றுக்கிழமை வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தம்ப னூர் காவல் நிலையத்திற்கு மின்னஞ்சல்  மூலம் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்  கப்பட்டது. ஆனால் மிரட்டல் விடுக்கப்  பட்ட நபர் தொடர்பாக ஞாயினன்று மாலை  வரை உறுதியான தகவல் எதுவும் வெளி யாகவில்லை. இதுதொடர்பாக மூத்த  காவல்துறை அதிகாரி கூறுகையில், “மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு தடுப்  புப் படைகளின் உதவியுடன் நாங்கள் முழுமையான சோதனைகளை மேற்  கொண்டோம். முதலமைச்சர் இல்லத்தில்  சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டு பிடிக்கப்படவில்லை. சோதனையின் போது முதல்வர் பினராயி விஜயனும் அவரது குடும்பத்தினரும் வெளிநாட்டில் இருந்தனர்” என அவர் கூறினார். இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என கேரள காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாநிலம்  முழுவதும் உள்ள முக்கிய நிறு வனங்களை குறிவைத்து சமீபத்தில் வந்த தொடர் வெடிகுண்டு மிரட்டல்களு டன் இந்த மிரட்டல் தொடர்புடையதா என்பதை அறிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாஜக ஆளும் ஒடிசா மாநிலத்தில் ரூ.5 கோடி நில மோசடி தொடர்பாக ரியல் எஸ்டேட் அதிபர் கைது செய்யப் பட்டுள்ளார். மொத்தம் 200க்கும் மேற்  பட்டோர் இந்த மோசடியில் ஏமாற் றப்பட்டுள்ளனர்.