states

படகு தீப்பற்றி 41 பேர் பலி

டாக்கா, டிச.25- வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து கடந்த வியாழக் கிழமை இரவு 800 பேருடன் மூன்று அடுக்குகளை கொண்ட பயணிகள் படகு (எம்வி அபிஜன்-10) பர்குனா மாவட்டம் நோக்கிப் புறப்பட்டது.  ஜலாஹதி மாவட்டத்தில் உள்ள சுகந்தா ஆற்றில் வெள்ளியன்று அதிகாலை 3 மணியளவில் சென்றுகொண்டிருந்தபோது படகில் திடீ ரென தீ விபத்து ஏற்பட்டது. இஞ்சின் அறையில் ஏற்பட்ட தீ மளமள வென படகின் பிற பகுதிகளுக்கும் வேகமாகப் பரவியது. வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் பயணிகள் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தபோது நிகழ்ந்த தீ விபத்தில் பலர் சிக்கிக்கொண்டனர். தீயில் இருந்து தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள பல பயணிகள் ஆற்றில் குதித்தனர். இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புப் படை யினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படகில் பற்றிய தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பல மணி நேர போராட்டத் திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது.  ஆனாலும், இந்த தீ விபத்தில் படகில் பயணித்த பலர் சிக்கினர். தீயில் சிக்கி  பல பயணிகள் உயிரிழந்தனர். மேலும், தீயால் ஏற்பட்ட புகையாலும் மூச்சுத்திணறி பலர் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களு டன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், படகில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் சிக்கி உயிரி ழந்தோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளதாக டாக்கா டிரிப்யூன் தெரிவிக்கிறது. உயிரிழந்தவர்களில் ஒன்பது பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த தீ விபத்தில் படுகாயமடைந்த 150 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வரு பவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.  படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு வங்கதேச குடியரசுத் தலை வர் அப்துல் ஹமீது,  பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.