புதுதில்லி, மே 31- 2020-21-ஆம் நிதியாண்டில் பாஜக ரூ.477.5 கோடி அளவிற்கு தேர்தல் காலத்தில் வசூல் வேட்டை நடத்தியுள்ளது. காங்கிரஸ் ரூ.74.50 கோடி தேர்தல் நிதி திரட்டியுள்ளது. ஆளும் பாஜக-வுடன் ஒப்பிட்டால் காங்கிரஸ் கட்சியால் 15 சதவீத நிதியை மட்டுமே திரட்ட முடிந்துள்ளது. செவ்வாயன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், பாஜக பல்வேறு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் மற்றும் தனிநபர் களிடமிருந்து ரூ.4,77கோடியே 54லட்சத்து 50ஆயிரத்து 077 பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. தேர்தல் சட்டவிதிகளின்படி ரூ.20,000-க்கு மேல் பெறப்பட்ட நன்கொடை குறித்த அறிக்கை யை கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும்.