பெங்களூரு, மார்ச் 14 - கர்நாடக பாஜக எம்எல்ஏ ஈஸ்வ ரப்பா, ‘அல்லா-வை காது கேளா தவரா?’ எனக் கேட்டு அவமதித்த சம்ப வம் நடந்துள்ளது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ‘விஜய் சங்கல்ப யாத்திரை’ என்ற பிரச்சார இயக்கத்தை பாஜக நடத்தி வருகிறது. ஞாயிறன்று இந்த பிரச்சாரத்தில் பங்கேற்று ஈஸ்வரப்பா பேசியபோது, ‘ஆஸான்’ எனப்படும் தொழுகைக்கான இஸ்லா மிய அழைப்பு அருகிலுள்ள மசூதியி லிருந்து ஒலித்தது. அதைக் கேட்ட ஷிவமோகா எம்எல்ஏ ஈஸ்வரப்பா, எங்கு சென்றாலும் ‘ஆஸான்’ தலை வலியாக என்று கூறியதுடன், “உச்ச நீதிமன்ற நீதிபதி இருக்கிறார். இன்றோ நாளையோ, இது (மைக்குகளில் ஆஸானை அழைக்கும் வழக்கம்) நிச்சயமாக முடிவுக்கு வரும்” என்றார். இதனைக் கேட்டு பாஜக-வினர் கை களைத் தட்டி ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து பேசிய ஈஸ்வரப்பா, “நாங்களும் கோவில்களில் பிரார்த்தனை செய்கிறோம். நாங்கள் ஸ்லோகங்களை உச்சரிக்கிறோம், பெண்கள் பஜனைப் பாடுகிறார்கள். ஆனால் அவர்கள் (இஸ்லாமியர்கள்) மைக் மூலம் சத்தமாக கத்துகிறார்கள் என்றால், அவர் (அல்லா) காது கேளாதவர் என்றுதான் சொல்ல வேண்டும். (ஆஸான்) தேவை யில்லை. எனவே, இந்தப் பிரச்சனை க்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என நான் கருதுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். வாய்க்கொழுப்பான பேச்சுக்கு பெயர்போனவரான இதே ஈஸ்வரப்பா தான், முன்பொருமுறை, “இந்தியா வின் தேசியக் கொடியாக மூவர்ணக் கொடிக்குப் பதிலாக ஒருநாள் காவி கொடி பறக்கும்” என்று குறிப்பிட்டவர் ஆவார். ரூ. 4 கோடி மதிப்பிலான அரசு காண்ட்ராக்டில் பில் தொகை வந்துசேர வேண்டுமானால், தனக்கு 40 சதவிகித கமிஷன் வேண்டும் என்று ஈஸ்வரப்பா கேட்டதாக சந்தோஷ் பாட்டீல் என்ற காண்ட்ராக்டர் கடிதம் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பதவியை இழந்தவர் ஈஸ்வரப்பா என்பது குறிப்பிடத்தக்கது.