states

img

கர்னல் சோபியா குரேஷியை “பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் சகோதரி” என்று அழைத்த பாஜக அமைச்சர்

கர்னல் சோபியா குரேஷியை “பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் சகோதரி” என்று அழைத்த பாஜக அமைச்சர்

நாடு முழுவதும் வலுக்கும் கண்டனம் ; வழக்குப் பதிவு

இந்திய விமானப்படை மற்றும் ராணுவத்தின் வெடிகுண்டு அகற்றும் பிரிவு தலைவராக இருப்பவர் கர்னல் சோபியா குரேஷி. இவர் இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றத்தின் போது, நேரடியாக போர்க் களத்தில் பணியாற்றியவர். குறிப்பாக போர் பதற்றத்தின் போது நாட்டு மக்களுக்கு அனைத்து அறிவிப்புகளையும், விமா னப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் உடன் “ஆபரேசன் சிந்தூர்” தொடர்பாக விளக்கம் அளித்த வரும் சோபியா குரேஷி தான். இந்நிலையில், கர்னல் சோபியா குரேஷி குறித்து மத்தியப்பிரதேச பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா,”நம் நாட்டு சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவர்களை, அவர்களின் (பாகிஸ் தான் சகோதரி) சகோதரியை வைத்து பிரதமர் மோடி ஒழித்துவிட்டார்” எனக் கூறியிருந்தார்.  கர்னல் சோபியா இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவ ரை பாகிஸ்தான் சகோதரி என சித்தரிக்கும் வகையில் பாஜக அமைச்சர் பேசியதற்கு எதிர்க் கட்சிகள் உட்பட நாடு முழுவதும் அனைத் துத் தரப்பினரும் கடும் கண்டனம் தெரி வித்து வருகின்றனர். ஆனால், பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா,”நான் பேசியதை சிலர் தவறாகப் புரிந்துகொண்டார்கள். பஹல்காம் தாக்குதலால் நானும் எனது குடும்பத்தினரும் மன உளைச்சலுக்கு ஆளானோம். சில ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை நான் கூறியிருந்தால், 10 முறை மன்னிப்புக் கேட்க நான் தயாராக இருக்கிறேன்” என கூறினார். கர்னல் சோபியா குரேஷியை “பாகிஸ்தான் சகோதரி” என்று அழைத்த பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா மீது மத்தியப்பிரதேசத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.