தில்லியின் மூன்று மாநகராட்சிகளை ஒன் றாக இணைக்கும் மசோ தாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது குறித்து, ‘ஆம் ஆத்மி கட்சி’ டுவிட்டரில் கருத் துப் பதிவிட்டுள்ளது. அதில், “3 மாநக ராட்சிகளையும் இணைப்பதன் மூலம் தோல்வியில் இருந்து தப்பிக்கலாம் என்று ஊழல் பாஜக நினைத்தால், தில்லி மக்கள், ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்து அந்த எண்ணத்தை அகற்றுவார்கள். மாநக ராட்சி தேர்தலில் பாஜக தோல்வியை தடுப் பது சாத்தியமற்றது” என்று தெரிவித்துள்ளது.