states

img

தில்லி முழுவதும் ஆதரவு பெருகுவதால் கலக்கத்தில் பாஜக

தில்லியில் ஆட்சியை கவிழ்க்க வும், மக்களவை தேர்தலில்  பிரச்சாரம் மேற்கொள்வதை தடுக்க ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பா ளரும், தில்லி முதல்வருமான அர விந்த் கெஜ்ரிவாலை மார்ச் 21 அன்று  அமலாக்கத்துறை (மதுபான கொள்கை  வழக்கு) மூலம் கைது செய்து சிறையில்  அடைத்தது மோடி அரசு. தற்போது கெஜ்ரிவால் திஹார் சிறையில் இருந்த படியே தில்லி மாநில நிர்வாகத்தை கவ னித்து வருகிறார். கெஜ்ரிவாலை சிறையில் வைக்கப்  பட்டுள்ளதால் இனி சுதந்திரமாக தேர்  தல் பிரச்சாரம் மேற்கொண்டு 7 மக்க ளவை தொகுதியையும் கைப்பற்றி விட லாம் என பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் கனவு கண்டனர்.  இந்நிலை யில், பாஜகவினரின் கனவுக்கு கெஜ்ரி வாலின் மனைவி கொள்ளி வைத்துள ளார். ஏற்கெனவே ஜார்க்கண்ட் மாநி லத்தில் நடைபெற்ற “இந்தியா” கூட்  டணி பிரச்சார பேரணியில் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கலந்து கொண்ட நிலை யில், தற்போது தில்லியில் முழுநேர பிரச்  சாரத்திற்கு கெஜ்ரிவால் களமிறங்கி யுள்ளார். பிரச்சாரம் பேரணியாக  மாறிய அதிசயம் தில்லியில் உள்ள 7 மக்களவை தொகுதியில் ஆம் ஆத்மி 4 தொகுதிகளி லும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் கள மிறங்கியுள்ளது. இந்த 7 தொகுதிகளுக்  கும் ஒரே கட்டமாக மே 25 அன்று  (6ஆவது கட்டத்தில்) வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தை கெஜ்ரி வாலின் மனைவி சுனிதா சனியன்று கிழக்கு தில்லி மக்களவைத் தொகு திக்கு உட்பட்ட கோண்ட்லி பகுதியில் தொடங்கினார். சுனிதாவின் பிரச்சாரம் சாதாரண வாக்குச் சேகரிப்பு பயணம்  என்றே ஆம் ஆத்மி கூறிய நிலையில்,  இந்த பிரச்சாரத்திற்கு பொதுமக்கள் பிரம்மாண்ட ஆதரவு வழங்கி வருவ தால் அது பேரணியாக மாறிவிட்டது. இதுபோக தில்லியில் உள்ள காங்கிரஸ்  உள்ளிட்ட “இந்தியா” கூட்டணிக் கட்சி யினரும் சுனிதாவிற்கு பக்க பலமாக  உடன் செல்வதால் தில்லி முழுவதும்  “இந்தியா” கூட்டணிக்கு ஆதரவு அலை  தற்போதே தீவிரமெடுத்துள்ளது. தங்க ளது வியூக கனவுகள் அனைத்தும் கானல் நீரைப் போன்று காணாமல் போகும் நிலையில், தில்லியில் வேறு என்ன செய்வது என்று தெரியாமல் பாஜகவினர் புலம்பிவருகின்றனர்.

பாவம்... இதைத் தவிர  பாஜகவிற்கு என்ன தெரியும்?

தில்லியில் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதாவின் பிரச்சாரத்தால் “இந்  தியா” கூட்டணிக்கான ஆதரவு பல்மடங்கு உயர்ந்து வரும் நிலையில்,  தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லியை பண பலம் மற்றும்  மிரட்டல் மூலம் தங்கள் பக்கம் வளைத்தது பாஜக. ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைத்ததால் நான் கட்சியை விட்டு விலகுவதாக அரவிந்த் சிங் லவ்லி சாக்குபோக்கு சொல்லி பாஜக கூடாரத்தில் பதுங்கியுள்ளார். எதிர்க்கட்சியினரை வளைக்கும் திட்டத்தை தவிர பாஜகவிற்கு வேறு என்ன  தெரியும்.

இதற்கு என்ன சொல்ல போகிறது பாஜக?

கெஜ்ரிவாலின் மனைவி வீட்டை விட்டு வெளியே  வந்ததை நாங்கள் பார்த்த தில்லை. அவர் அரசியல் பிரச்சா ரத்தில் என்ன செய்ய போகி றார்? அவருக்கு அரசியல் பற்றி  என்ன தெரியும்? மைக் பிடிக்க தெரியுமா? என்றெல்லாம் சுனிதாவை கிண்டல் செய்தனர்.  ஆனால் தனது முதல் பிரச்சாரக்  கூட்டத்தில் சுனிதா பாஜகவை  பந்தாடியுள்ளார். பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது, “தில்லி முதல்வரும், எனது கணவரு மான கெஜ்ரிவால் கடந்த ஒரு  மாத காலத்திற்கு மேலாக சிறை யில் அடைக்கப்பட்டுள்ளார். எந்த  நீதிமன்றமும் அவரை குற்ற வாளி என அறிவிக்கவில்லை. விசாரணை மட்டுமே நடைபெற் றுக் கொண்டிருக்கிறது. விசா ரணை 10 ஆண்டுகளுக்கு நடை பெற்றால் அவர் பத்தாண்டு களும் சிறையில் அடைக்கப்  பட்டு இருக்க வேண்டுமா? முன்பு நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்தால் மட்டுமே சிறை யில் அடைக்கப்பட்டுக் கொண்டி ருந்தார்கள். ஆனால் ஒரு புதிய  முறையை இப்போது கொண்டு  வந்திருக்கிறார்கள். இது சர்வாதிகாரம். கெஜ்ரிவாலுக்கு 22 ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. 12 ஆண்டு களாக இன்சுலின் எடுத்துக் கொண்டு வருகிறார். சிறையில் அவருக்கு இன்சுலின் மறுக்கப்  பட்டுள்ளது. அவர்கள் கெஜ்ரி வாலை கொல்ல வேண்டும் என  நினைக்கிறார்களா? இந்த நாடு  சர்வாதிகாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. உங்கள் வாக்கின் வலிமையை உணர்ந்து மே 25 அன்று சர்  வாதிகாரத்தை அகற்றி ஜன நாயகத்தை காக்க நாம் அனை வரும் வாக்களிக்க வேண்டும். நாம் ஒன்றாக போராடி இதில் வெற்றி பெறுவோம்” என பேசி னார். சுனிதாவின் இந்த அதிரடி  பேச்சிற்கு பாஜகவினர் என்ன சொல்ல போகிறார்கள்?

;