பெங்களூரு, பிப். 17 - அயோத்தி போல, கர்நாடக மாநிலம் ராமநகராவிலும் ராமர் கோவில் கட்டப்படும் என அம்மாநில பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. தென்னிந்தியாவில் கர்நாடகாவில் மட்டுமே பாஜக ஆட்சியில் உள்ள தால், அந்த ஆட்சியை தக்கவைக்க பகீரத பிரயத்னங்களை பாஜக மேற்கொண்டு வருகிறது. பிரதமர் மோடி கடந்த சில வாரங் களாகவே அடுத்தடுத்து கர்நாடக மாநி லத்திற்கு வருவதும், பல்வேறு திட்டங் களுக்கு அடிக்கல் நாட்டுவதுமாக உள்ளார். மறுபுறத்தில் மதவெறி மூலமாக பெரும்பான்மை மக்களை தங்கள் பக்கம் இழுப்பதை உள்ளூர் பாஜக தலைவர்கள் செய்து வருகின்ற னர். அந்த அடிப்படையில், 2023-24 நிதி யாண்டிற்கான கர்நாடக மாநில இடைக்கால பட்ஜெட்டை வெள்ளி யன்று தாக்கல் செய்த பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை, “அயோத்தி போல, கர்நாடகாவின் ராமநகராவிலும் ராமர் கோவில் கட்டப்படும்” எனவும் “ராமநகரா ராமர் கோவில் உட்பட கர்நாடகா மாநில கோவில்கள், மடங் கள் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கு ரூ. 1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படு கிறது” என்றும் அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் அமையும் ராமர் கோயிலுக்கு, உத்தரப் பிரதேச சாமியார் முதல்வர் ஆதித்யநாத் அடிக்கல் நாட்டுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கு கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சித் தலைவருமான குமாரசாமி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.