பொதுக்கூட்டத்திற்கு வரவில்லை என்றால் ரேஷன் விநியோகம் நிறுத்தப்படும் மணிப்பூர் மக்களை மிரட்டி மோடியின் சுற்றுப்பயணத்திற்கு ஆட்களை அழைத்து வந்த பாஜக
இம்பால் மணிப்பூரில் வன்முறை வெடித்த பின்பு (2 ஆண்டுகளுக்குப் பின்பு) செப்., 13ஆம் தேதி சுராசந்த்பூர் மற்றும் இம்பாலுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தின் போது 2 பொதுக் கூட்டங்கள் (சுராசந்த்பூர், இம்பால்) நடை பெற்றன. இதில் சுராசந்த்பூரில் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மக்கள், மிரட்டல் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. பாஜக தனியாக உரு வாக்கியுள்ள குக்கி- ஸோ ஆயுதக்குழுக்கள் பாழடைந்த நிவாரண முகாம்களில் வசிக்கும் தங்கள் சமூகத்தைச் (குக்கி- ஸோ) சேர்ந்த இடம்பெயர்ந்த மக்களை சுராசந்த்பூரில் உள்ள மைதானத்தில் அமர உத்தரவிட்டுள்ளனர். அவ்வாறு பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வில்லை என்றால் ரேஷன் விநியோகம் நிறுத்தப்படும் என பாஜக ஆதரவு குக்கி- ஸோ ஆயுதக்குழுக்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் “தி வயர்” இணையதள செய்தி நிறுவனத்திடம் இவ்வாறு கூறியுள்ளனர். மேலும் மோடியின் ரோடு ஷோக்களிலும் மிரட்டல் மூலமாகவே பாஜக பொதுமக்களை பங்கேற்க வைத்துள்ளனர். மிரட்டலுக்கு பயந்து பலத்த மழையையும் பொருட்படுத்தாமல் பெண்கள், குழந்தைகள் மோடியை வரவேற்க மூவர்ணக் கொடியுடன் சென்றனர். பல பள்ளி குழந்தைகள் மணிக்கணக்கில் மழையில் நிற்க வைக்கப்பட்டு இருந்தனர். இந்த கொடூர காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இம்பாலில் அரசு ஊழியர்களுக்கு நெருக்கடி சுராசந்த்பூர் போல இம்பாலில் அரசாங்கத்தி டமிருந்து சம்பளம் பெறும் அனைவரும் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என ஆளுநர் உத்தரவின் பேரில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு ஊழியர்கள் கூறுகையில், “அங்கன்வாடி ஊழியர்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் என அனைத்து தரப்பு அரசு ஊழியர்களும் மோடி பங்கேற்கும் இம்பாலின் காங்லா கோட்டையில் கண்டிப்பாக இருக்க வேண்டும். இதில் பங்கேற்கவில்லை என்றால் சம்பளம், பதவி உயர்வு உள்ளிட் டவை கிடையாது என மிரட்டல் விடுக்கப் பட்டது” என்று கூறியுள்ளனர். இதன்மூலம் மணிப்பூர் மக்கள் மோடியை யாரும் தானாக வந்து வரவேற்கவில்லை; பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மிரட்டல் மூலமே மோடிக்கு வரவேற்பும், பொதுக்கூட்டத்தில் ஆட்சேர்ப்பும் நடந்துள்ளது அம்பலாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.