நாடாளுமன்ற வளாகத்தில் “இந்தியா” கூட்டணி எம்.பி.,க்கள் போராட்டம்
பீகார் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்குத் திருட்டு புகார் தொடர்பாக விசாரணை மற்றும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்பதை வலி யுறுத்தி செவ்வாய்க்கிழமை அன்று நாடாளு மன்ற வளாகத்தில் “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் மீண்டும் போராட்டம் நடத்தின. இந்த போராட்டத்தில் காங்கிரஸ், திமுக, இடதுசாரி கட்சிகள், சமாஜ்வாதி, சிவசேனா (உத்தவ்), திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத்), தேசிய மாநாட்டுக் கட்சி என “இந்தியா” கூட்டணியின் 100க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள் கலந்து கொண்டனர். மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி எம்.பி., திமுக எம்.பி., டி.ஆர்.பாலு உள்ளிட்ட மூத்த தலைவர்களும் போராட்ட த்தில் பங்கேற்றனர். போராட்டத்தின் போது பிரி யங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.,க்கள் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டிய லில் 124 வயதுடையவராகப் பட்டியலிடப்பட்ட வாக்காளர் மிண்டா தேவி உருவம் கொண்ட டி-சர்ட்களை அணிந்திருந்தனர் (டீ-சர்ட்டின் பின்புறம் “124 நாட் அவுட்”). மேலும், விவசாயிக ளை ஆதரிக்கும் விதமாக வெங்காயத்திற்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கோரி, பல எம்.பி.,க்கள் வெங்காயத்தால் செய்யப்பட்ட மாலை கள் மற்றும் பதாகைகளுடன் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மிண்டா தேவி? பீகாரைச் சேர்ந்த மிண்டா தேவி பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றி ருந்தது. அவரது வயது 124 என்றும் வாக்காளர் பட்டியலில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இப்போது உலகில் 115 வயதான நபரே மிகவும் வயதானவர் என்ற பட்டத்தை வைத்திருக்கி றார். அப்படியிருக்கும் போது அவரை விட 9 வயது மூத்தவராக மிண்டா தேவி பெயர் இருக்கிறது. மிண்டா தேவி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்றும் அவரது பெயரை வைத்து போலி வாக்கு செலுத்தப்பட்டிருக்க லாம். இது போல அதிகமான போலி வாக்கு கள் செலுத்தப்பட்டிருக்கலாம் . இதுவே தேர்தல் முடிவுகளை மாற்றியிருப்பதாகக் குற்றம் சாட்டி, “மிண்டா தேவி 124 நாட் அவுட்” என்ற டி-சர்ட்டுகளுடன் காங்கிரஸ் எம்.பி.,க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.