states

img

மகாத்மா காந்தியின் பேச்சைக் கேட்காதவர்கள் மகா பாவிகள்!

புதுதில்லி, ஏப்.2- திரிணாமுல் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி நிலையான கொள்கை இல்லாதவர் என்று காங்கிரஸ் மக்களவைக் குழுத்  தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விமர்சித்துள்ளார். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த செவ் வாய்க்கிழமையன்று பாஜக அல்லாத முதல்வர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்த  கடிதத்தில், “பாஜக-வின் அடக்கு முறை ஆட்சியை எதிர்த்துப் போராட தேசத்தின் முற்போக்கு சக்திகள் ஒன்றிணைய வேண் டும். இந்த நாட்டின் நிறுவன ஜன நாயகத்தின் மீது ஆளும் பாஜக -வின் நேரடி தாக்குதல்கள் குறித்து ஆழ்ந்த கவலைகளை தெரிவிக்கவே நான் உங்க ளுக்கு கடிதம் எழுதுகிறேன்” என்று தெரிவித்து இருந்தார். இந்நிலையில், மம்தா கடிதம் குறித்து, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியிருப்பதாவது: “மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சில சமயங்க ளில் பாஜக-வுக்கு எதிராகவும், சில சமயங்களில் பாஜக மற்றும் காங்கிரசுக்கு எதிராகவும் அனை வரும் ஒன்றிணைய வேண்டும் என்கிறார். சில சமயங்களில் காங்கிரசை முடிக்க வேண்டும் என்கிறார். அவரது அறிக்கை கள் இரவும், பகலும் மாறு கின்றன.  பிர்பூம் வன்முறை தொடர் பாக, உயர் நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கோரி னோம். பிர்பூம் வன்முறையில் திரிணாமுல் காங்கிரஸ் சிக்கித் தவிப்பதால் தீதி (சகோதரி) பயப்படுகிறார். அதனால்தான் அனைவரையும் அழைக்கி றார். மேற்கு வங்க அரசால் குற்றவாளிகளை பிடிக்க முடிய வில்லை?.” இவ்வாறு அவர் கூறியுள் ளார்.