states

பீகார்: சிறப்பு தீவிர திருத்தத்துக்கு பின்  67,826 போலி வாக்காளர்கள்

பீகார்: சிறப்பு தீவிர திருத்தத்துக்கு பின்  67,826 போலி வாக்காளர்கள்

பீகார் மாநிலத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர சீர்திருத்தப் பணிக்குப் பின், வெளியிடப்பட்டுள்ள வரைவு  பட்டியலில் போலி வாக்காளர்கள் ஏராள மானோர் இருப்பதாக செய்திகள் வெளி யாகியுள்ளன.  இதுதொடர்பாக ஆதாரங்களுடன் ஊடகங்களில் வெளியான செய்தி களில், “பீகாரில் வாக்காளர் சிறப்பு தீவிர  சீர்திருத்தப் பணிக்குப் பின் வெளியான வரைவு பட்டியலில் 15 தொகுதிகளில் 67,826 போலி வாக்காளர்கள் சேர்க்கப் பட்டுள்ளனர். மற்ற தொகுதிகளிலும் போலி வாக்காளர்கள் கண்டறிய வாய்ப்  புள்ளது” என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த தகவலுக்கு வழக்கம் போல  தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித் துள்ளது. இதுதொடர்பாக ஞாயிறன்று காலை பீகார் மாநில தலைமை தேர்தல்  ஆணையம் தனது டுவிட்டர் எக்ஸ் பக்  கத்தில்,”சிறப்பு தீவிர சீர்திருத்தம் (எஸ்ஐஆர்) என்பது மக்கள் பிரதி நிதித்துவச் சட்டம், 1950 மற்றும் வாக்கா ளர்கள் பதிவு முறைச் சட்டம் ஆகிய வற்றின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து வெளியிடப்பட் டுள்ள நடப்பு வரைவு வாக்காளர் பட்டி யல் இன்னும் இறுதி வடிவம் பெற வில்லை. பொது மக்கள் விவர சரி பார்ப்புக்காகவே அவை வெளியிடப்பட்  டுள்ளன. அவற்றில் ஏதேதெனும் ஆட் சேபணை இருப்பின் வாக்காளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் இதர தரப்பி னர் தெரிவிக்கலாம். எனினும் வாக்காளர்  வரைவு பட்டியலில் 67,826 போலி வாக்கா ளர்கள் இருப்பதாக ஊடகங்களில் வெளி யாகும் தகவலானது, தரவு திரட்டுதல் மூலம் பெறப்பட்டுள்ளவை. அவைய னைத்தும் கள விவர சரிபார்ப்புப் பணி,  ஆவண சரிபார்ப்பு ஆகியவை மூலம்  மேற்கொள்ளப்பட்டு வெளியிடப்பட் டுள்ள தகவல் அல்ல” என மறுப்பு தெரி வித்துள்ளது.