பெங்களூரு “கர்நாடக முதலமைச்சர் மாற்றம் தொடர்பான கேள்வி எதற்கு?”
கர்நாடக முதலமைச்சர் மாற்றம் தொடர்பான கேள்வி எதற்கு? என பாஜக ஆதரவு பெற்ற “கோடி மீடியா” ஊடகங்களுக்கு, காங்கிரஸ் பொ துச் செயலாளர் கே.சி.வேணுகோபால் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற செய்தியா ளர் சந்திப்பில் “கோடி மீடியா” ஊடகங் கள் எழுப்பிய கேள்விக்கு அவர் மேலும் கூறுகையில்,”முதலமைச்சராக யாரை நியமிக்க வேண்டும் என்பதை காங்கிரஸ் மேலிடமே முடிவு செய்யும். கட்சிக்குள் நடக்கும் விஷயங்கள் அனைத்துக்கும் கட்சி மேலிடமே நடவடிக்கையும், முடி வும் எடுக்கும். அதற்கான அனைத்து தகுதி களும் கட்சி மேலிடத்துக்கு தான் உள்ளது. முடிவு எடுக்க வேண்டிய நேரம் வந்தால், அதை கட்சி மேலிடம் பார்த்துக் கொள்ளும். அதனால் அதைப்பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். நான் இங்கு வரும்போதெல்லாம் முதல மைச்சராக சித்தராமையா 5 ஆண்டுக ளும் நீடிப்பாரா? அல்லது இரண்டரை ஆண்டுகளில் முதலமைச்சராக மாற்றப் படுவாரா? என்று தான் கேட்கிறார்கள். கட்சி தலைமை மாற்றம் குறித்தும், முதலமைச்சர் மாற்றம் குறித்தும் கட்சி மேலிடமே பார்த்துக் கொள்ளும்” என அவர் கூறினார்.