states

காவிரியில் வெள்ளப்பெருக்கால் நெற்பயிர்கள்-பணப்பயிர்கள் பாதிப்பு அரசு முறையாக கணக்கெடுத்து நிவாரணம் வழங்கிடுக!

வனங்களில் மேய்ச்சலுக்கு தடை அரசு மேல்முறையீடு செய்திடுக!

மேற்குத் தொடர்ச்சி மலையில் 100 வருடங்களுக்கு மேலாக  விவசாயிகள் குடியிருந்தும் வன நிலங்க ளில் விவசாயம் செய்தும் வருகின்றனர்.  விவசாயிகளுக்கு மேகமலை, வருசநாடு, தும்மக்குண்டு, முறுக்கோடை, சிங்கராஜ புரம் உள்பட எட்டு ஊராட்சிகளில் 96 கிரா மங்கள் உட்பட 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வன விவசாயிகளை, உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தொடரப்பட்ட பொது நல வழக்கில் கடந்த 2018 இல் விவசாயி களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக்கூறி வன நிலங்களில் இருந்து வெளியேற்ற வேண் டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும்  வன விவசாயிகள் சார்பில் உச்சநீதிமன் றத்தில் அப்பீல் செய்து அந்த வழக்கில்  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சீராய்வு மனு போடப்பட்டு 2021 இல் வழங்கப்பட்ட தீர்ப்பில் தனி படை அமைத்து வன விவ சாயிகளுக்கு எந்தவித இழப்பீடும் வழங்கா மல் வெளியேற்ற வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதே போல் இந்த மாவட்டத்தில் மலை மாடுகள், நாட்டு மாட்டு இன மாடுகள் 25 ஆயிரத்திற்கும் மேல் உள்ளது. ஆறு மாதம் மலைகளிலும் ஆறு  மாதம் சமவெளிப்பகுதியிலும் மேய்ச்சலில் ஈடுபட்டு வந்த மலை மாடுகளை வனங்களில் மேய்க்க தடை என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பு  தேனி மாவட்ட மலை மாடுகள் வளர்ப்போ ருக்கும், மக்களுக்கும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இந்த நாட்டு மாடு இனம் அழி யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 2006 வன உரிமைச் சட்டப்படி இந்த இரு தீர்ப்புகளை எதிர்த்து தமிழக அரசு  மேல்முறையீடு செய்ய கேட்டு தேனி மாவட்டத்தில் வன விவசாயிகள், மலை  மாடுகள் வளர்ப்போர் சங்கங்கள் சார்பில்  தொடர் இயக்கம் நடத்தி வலியுறுத்தப் பட்டது. இதையொட்டி தமிழக முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் மற்றும்  அகில இந்திய துணைத் தலைவர் கே. பால கிருஷ்ணன் தலைமையில் இரு முறை வலியுறுத்தி மனு தந்து பேசப்பட்ட போதும்  தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்  தில்  மேல்முறையீடு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந் தார். ஆனாலும் தற்போது வரை மேல்முறை யீடு செய்யாமல் இருப்பதால் இந்த பகுதி  மக்கள் பதற்றத்துடன் உள்ளனர். ஆகவே உடனடியாக மேல்முறையீட்டு மனு செய்ய  தமிழக அரசை மாநிலக்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

தேனி, செப்.3- காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால்  நெற்பயிர்கள்,  வாழை, பருத்தி, சோளம்,  காய்  கறிகள், பூ உள்ளிட்ட பணப்பயிர்களும் பாதிக்  கப்பட்டுள்ளன. அரசு முறையாக கணக்கெ டுத்து பாதிப்புக்கு ஏற்ப நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் செப்டம்பர் 2,3 ஆகிய தேதி களில் தேனி மாவட்டம் போடியில் மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவர்  கே.பாலகிருஷ்ணன், மாநிலப் பொதுச்செயலா ளர் பெ.சண்முகம், மாநிலப் பொருளாளர் கே.பி. பெருமாள், தேனி மாவட்டச் செயலாளர் டி.கண்ணன், மாவட்டத் தலைவர் எஸ்.கே. பாண்டியன்  மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்  கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்க் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  மேட்டூர் அணை வழக்கமாக ஜூன் 12ஆம்  தேதி திறப்பது வழக்கம்.

இந்த ஆண்டு முன்  கூட்டியே திறக்கப்பட்டதால் டெல்டா மாவட் டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயி லாடுதுறை, பகுதிகளில் முன்கூட்டியே குறுவை சாகுபடி தொடங்கப்பட்டது. வழக்கத்துக்கு மாறாக ஆகஸ்ட் மாதம் பெய்த தொடர் மழை யால் இதுவரை காவிரியில் மூன்று முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் சாய்ந்து தண்ணீ ரில் மூழ்கி முளைத்துவிட்டன. மேலும் வாழை,  பருத்தி, சோளம்,  காய்கறிகள், பூ உள்ளிட்ட பணப்பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன. விதைத்த சம்பா பயிர்களும் முளைத்து அழுகிவிட்டன. இதனால் விவசாயிகள் பெரும் இழப்புக்கு உள்ளாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதி யில் பாதிப்பு குறித்து அரசு முறையாக கணக்கெ டுப்புக்கு உத்தரவிட வேண்டும். கடந்த ஆண்  டும் இந்த ஆண்டும் குறுவை நெற்பயிருக்கு பயிர் காப்பீடு திட்டத்தை மாநில அரசு செயல் படுத்தாத நிலையில் குறுவை நெற்பயிர் உட்பட பாதிக்கப்பட்ட பணப்பயிர்களுக்கும் அறுவடைக்கு தயாராக இருந்த அழிந்து போன நெற்பயிருக்கு ஏக்கருக்கு மாநில அரசு  ரூ.35 ஆயிரம் நிவாரணம் மற்றும் பணப்பயி ருக்கு பாதிப்புக்கு ஏற்ப உரிய நிவாரணத்தை மாநில அரசு அறிவிக்க வேண்டும். 

பரம்பிக்குளம் ஆழியாறிலிருந்து  தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை ரத்து செய்க!

தமிழ்நாடு அரசு 6-11-2021 தேதியன்று பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்திலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு அறிவிப்பாணையை வெளி யிட்டுள்ளது. பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் 1.65 லட்சம் ஏக்கருக்கு வடிவமைக்கப்பட்டு, 30.5 டி.எம்.சி. ஆண்டுக்கு கிடைக்கும் என திட்ட மிடப்பட்டது .ஆனால் சராசரியாக ஆண்டுக்கு 16 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே கிடைத்து வரு கிறது. அதனால் மடை விட்டு, மடை பாசனம்  (முறை பாசனம்) அறிவிக்கப்பட்டு 2 ஆண்டு களுக்கு ஒரு முறை 120 நாட்களுக்கு தண்ணீர்  கிடைத்து வருகிறது. பாசனப் பரப்பும் 4.25  லட்சம் ஏக்கராக மாறிவிட்டது. இத்திட்டத்திலி ருந்து 5 நகராட்சிகள், 10 ஒன்றியங்களுக்கு குடி நீர் திட்டங்கள் ஏற்கனவே செயல்பட்டு வரு கின்றது.  

மிகவும் தண்ணீர் பற்றாக்குறை உள்ள  நிலையில் ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் திட்டம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து பரம்பிக்  குளம் ஆழியார் திட்டத்தில் பயன்பெறும் விவ சாயிகள் மற்றும் அனைத்து தரப்பினரும் கோவை, திருப்பூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கும் என தெரிவித்து புதிய திட்டத்தை  ரத்து செய்யக் கோரி வந்தனர். மேலும் ஒட்  டன்சத்திரத்திற்கு காவிரி மற்றும் பல்வேறு ஆறு களில் இருந்து குடிநீர் திட்டம் செயல் படுத்த  வாய்ப்பு இருந்தும் 100 கிலோ மீட்டர் தொலை வில் இருந்து தண்ணீர் கொண்டு செல்வது தேவையற்றது என்பதை முன்வைத்து போராட்டங்கள் அறிவித்திருந்தனர். இதை யடுத்து தமிழ்நாடு அரசு தலையிட்டு, நீர்வளத்  துறை அமைச்சர், உள்ளாட்சித் துறை அமைச்  சர் பேச்சுவார்த்தை நடத்தி பகுதி மக்கள் ஒத்து ழைப்பு இல்லாமல் ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு போக மாட்டோம் என  உறுதி அளித்துள்ளனர். ஆனால் பேச்சு வார்த்தைக்கு பின் டெண்டர் அறிவிப்பு வெளி யிடுவதும் அதை வாய்மொழியாக நிறுத்தி வைப்பதும் என்ற நிலையில்,  கோவை-திருப்பூர் மக்களுக்கு குழப்பத்தையும் அச்சத்தையும் உருவாக்கி உள்ளது. விவசாய அமைப்புகளு டன் நடைபெற்ற பேச்சுவார்த்தை அடிப்படை யில் மிகவும் பற்றாக்குறை நீர் உள்ள பரம்பிக்  குளம் ஆழியாறு பகுதியில் இருந்து ஒட்டன்  சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் அரசாணையை ரத்து செய்து, நிதி ஒதுக்கீட்டை திரும்பப் பெற்றும், தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுவதையும், அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும். ஒட்டன்சத்திரத்திற்கு மாற்று வழி யில் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.