states

img

அசாமில் மூங்கில் எத்தனால் ஆலை திறப்பு

அசாமில்  மூங்கில் எத்தனால் ஆலை திறப்பு  அசாம் மாநிலத்தின் கோல்கா மாவட்டத்தில் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ளார்.  இந்த ஆலையினால் அஸ்ஸாம் மாநி லத்திற்கு 200 கோடி ரூபாய் லாபம் கிடைக்  குமென கூறப்படுகிறது.  தேர்தல் நெருங்கும் வேளையில் வட  கிழக்கு மாநிலங்களில சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி சனிக்கிழமை மணிப்பூருக்கு சென்றார். அங்கு 3 மணிநேரம் மட்டுமே இருந்து தேர்தல் பிரசாரம் செய்த பிறகு அன்று இரவே அஸ்ஸாம் சென்றடைந்தார். அம்மாநிலத்தின் டாரங் மாவட்டத்தில்  6,300 கோடி ரூபாய் மதிப்பிலான சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளுக்கான அடிக்  கல் நாட்டிய பிரதமர் மோடி பிறகு மூங்கில் - எத்தனால் ஆலையை திறந்து  வைத்தார்.  மூங்கில் மூலம் எத்தனால் தயா ரிக்கப்படும் இந்த ஆலை பூஜ்ய கழிவு ஆலையாக இருப்பதால் மூங்கிலின் அனைத்து பாகங்களையும் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த ஆலையில் உற்பத்தி செய்வதற்காக வட கிழக்கு  மாநிலங்களில் இருந்து 5 லட்சம் டன்  பச்சை மூங்கில்கள் கொண்டுவரப் படும். இதனால், நேரடியாகவும் மறை முகமாவும் 50,000 மக்கள் பயன்படு வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.