பீகாரில் வாக்காளர்களை நீக்கும் முயற்சி அரசியலமைப்புக்கு எதிரானது மாபெரும் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் ; பரூக் அப்துல்லா எச்சரிக்கை
பீகாரில் வாக்காளர்களை நீக்கும் முயற்சி அரசியலமைப்புக்கு எதிரானது என ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல மைச்சரும், தேசிய மாநாட்டு கட்சித் தலைவரு மான பரூக் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். செவ்வாயன்று குல்காமில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் மேலும் கூறுகையில்,”பீகாரில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிடும் நேரத்தில், தேர்தல் ஆணையம் சிறப்பு திருத்தம் என்ற அறிவிப்பின் மூலம் வாக்காளர்களை நீக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது அரசியலமைப்புக்கு எதிரானது. பி.ஆர்.அம்பேத்கர் அரசியலமைப்பை உருவாக்கிய போது, வயது வந்த (21) அனைவருக்கும் வாக்க ளிக்கும் உரிமை இருந்தது. பின்னர் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு வாக்க ளிக்கும் உரிமை வழங்க அரசியலமைப்பு திருத்தப்பட்டது. ஆனால் இன்று வாக்கு உரிமையை பறிக்க தேர்தல் ஆணையம் அரசியலமைப்புக்கு எதி ரான புதிய விதிகளைக் கொண்டு வந்துள்ளது. தேர்தல் ஆணையம் தங்கள் எசமானனை மகிழ் விக்கவே இந்த முயற்சியை மேற்கொள்கின் றது. எசமானரை மகிழ்விக்க, எல்லாவற்றையும் தியாகம் செய்ய தயாராக உள்ளனர். 1.50 கோடிக்கும் அதிகமான பீகார் மக்கள் மாநிலத்தி ற்கு வெளியே பணிபுரிகின்றனர். அவர்கள் எப்படி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள புதிய படிவத்தை நிரப்புவார்கள்? எப்படி வாக்க ளிப்பார்கள்? இறந்த பெற்றோருக்கான சான்றி தழ்களை எங்கிருந்து பெறுவார்கள்? இது இந்திய மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட முடியா தது. ஒருவேளை திணிக்க முயன்றால், அரசியல மைப்பை காப்பாற்ற மாபெரும் போராட்டம் வெடிக்கும். அது முன்னைய போராட்டங்களை விட பெரியதாக இருக்கும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.