states

img

இன்று குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்

இன்று குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்

ஜகதீப் தன்கர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து காலி யாக உள்ள குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் செவ்வா ய்க்கிழமை(இன்று)நடைபெறுகிறது. இந்த தேர்தலில்   “இந்தியா” கூட்டணி சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன்ரெட்டியும், பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனும் போட்டியிடு கின்றனர். செவ்வாய்க்கிழமை காலை வாக்கு ப்பதிவு நடைபெறும்,  பதிவான வாக்குகள் மாலையில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். பலம் நாடாளுமன்றத்தில் மொத்த பலம்  788.  தற்போது மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த 781 எம்.பி.,க்கள் வாக்களிக்க உள்ளனர். ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இரு அவைகளிலும் மொத்தம் 422 எம்.பி.,க்கள் உள்ளனர். இது தவிர ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பிக்கள் 11 பேரும் ஆதரவளித்துள்ளதால் மொத்த எண்ணிக்கை 433 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் “இந்தியா” கூட்ட ணிக்கு இரு அவைகளிலும் மொத்தம் 313 எம்.பி.,க்கள் உள்ளனர். இந்த  கூட்டணிக்கு ஆம் ஆத்மி கட்சி எம்பிக் கள் 11 பேரும் ஆதரவளித்துள்ளதால் 325 ஆக உள்ளது. ஆதரவு நிலைப்பாட்டை அறிவிக்காத பிஜு ஜனதாதளம் உள்ளிட்ட சில கட்சி எம்.பி.,க்களின் எண்ணிக்கை 23 என்பது குறிப்பிடத்தக்கது.