காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்
வாக்குத் திருட்டு விவகாரத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பேசியதை முன்னாள் தேர்தல் ஆணையர்கள் குரேஷி, ராவத், அசோக் லவாசா ஆகியோர் கடுமையாக விமர்சித்துள்ளனர். மதிக்கத்தக்க இந்த 3 பேரது விமர்சனத்திற்கு ஞானேஷ் குமார் என்ன பதில் சொல்லப்போகிறார்?
மக்கள் ஜனநாயக கட்சியின் இளம் தலைவர் இல்திஜா முப்தி
காஷ்மீரில் அசோக சின்னம் சேதப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இது வெறும் சின்னத்தைப் பற்றியது அல்ல. வன்முறை தொடர்பானதாக கூட இருக்கலாம். அதனால் காஷ்மீர் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
ஆம் ஆத்மி தலைவர் சவுரப் பரத்வாஜ்
குடியரசுத் துணை தலைவர் பதவியில் இருந்த ஜகதீப் தன்கரை அவமானப்படுத்தி நீக்கிவிட்டார்கள். இதனால் நாட்டு மக்களிடையே அடுத்த குடியரசுத் துணை தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பும், ஆர்வமும் கொஞ்சம் கூட இல்லை. குடியரசுத் துணை தலைவர் பதவியை அவமானப்பொருளாக மாற்றிவிட்டார்கள்.
சிவசேனா (உத்தவ்) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி
அரசியலமைப்புடன் நிற்பவர்கள் “இந்தியா” கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். அரசியலமைப்புக்கு எதிரானவர்கள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். அவ்வளவு தான் குடியரசுத் துணை தலைவர் தேர்தல் முடிவு.